Home » சிறப்புச் செய்திகள், செய்தி, முக்கிய செய்திகள் » அனைத்து தமிழ் மக்களும் தமது ஆட்சேபனையைத் தெரிவிப்பது எமது பாரிய பொறுப்பாகும்.

அனைத்து தமிழ் மக்களும் தமது ஆட்சேபனையைத் தெரிவிப்பது எமது பாரிய பொறுப்பாகும்.

பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள லண்டன் வரும், மகிந்த ராசபட்ச 6ம் திகதி காமன்வெலத் வர்த்தக மையத்தில் உரையாற்ற உள்ளார்.

இம் மாநாடு 6ம் திகதி(புதன்கிழமை) காலை 9 மணிக்கு,  ஈழத் தமிழினத்தின் இன அழிப்புக்கு மூலமாக இருந்த  மகிந்த ராசபட்ச உரையாற்ற உள்ளார். இதனை பிரித்தானிய தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து புறக்கணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானிய தமிழர் பேரவை(BTF) இதன்போது பாரிய எதிர்பு ஆர்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
காமன்வெலத் வர்த்தக மாநாட்டில் மகிந்த ராஜபக்ஷ பேசக்கூடாது எனவும், அவர் ஒரு போர்குற்றவாளி என்று தெரிவிக்கும் பல தொலைபேசி அழைப்புகள் மூலம் மாநாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவியுங்கள்.  பிரித்தானியாவில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தமது ஆட்சேபனையைத் தெரிவிப்பது எமது பாரிய பொறுப்பாகும்.

கீழ் காணும் இலக்கத்தில் நீங்கள் காமன்வெலத் வர்த்தக மையத்தின் தலைமையோடு தொடர்புகொள்ள முடியும். தொடர்புகொண்டு உங்கள் ஆட்சேபங்களை தெரிவிப்பதன் மூலம், சிலவேளைகளில் உரையாற்றுவோர் பட்டியலில் இருந்து மகிந்த ராசபட்ச பெயர் நீக்கப்படலாம். (0270248200, 02070248239, 02070248271)

comment closed