Home » சிறப்புச் செய்திகள், முக்கிய செய்திகள் » கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒரு வரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர்

கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒரு வரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர்

போரில் தாம் ஒரு போதும் கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்த வில்லை என்று இலங்கைப் படைத்தரப்பு மறுத்துள்ள நிலையில், கிளஸ்டர் குண்டினால் பாதிக்கப்பட்ட ஒரு வரை நேரில் கண்ட மருத்துவப் பணியாளர் ஒருவரின் சாட்சியத்தை ஏபி செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில், கிளஸ்டர் குண்டு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஐ.நாவின் வெடி பொருள் நிபுணர் அலன் போஸ்ட னின் அறிக்கையை ஏபி செய்தி நிறுவனம் நேற்று முன்தினம் வெளி யிட்டிருந்தது.

இந்நிலையில் தனக்கு ஆபத்து நேரிடலாம் என்பதால் தனது பெயரை வெளியிட விரும்பாத அந்த மருத்துவப் பணியாளர் மேலும் கூறியுள்ளதாவது, போரின் இறுதி மாதங்களில் வெடிக்காத கிளஸ்டர் குண்டு ஒன்றினால் காயமடைந்த ஒருவரைப் பார்த்தேன். அவரது காலைக் கிழித்துக் கொண்டு நுழைந்த அந்த கிளஸ்டர் குண்டின் பாகம், வெடிக்காத நிலையில் புதைந்து போயிருந்தது. பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் புதுக்குடியிருப்பு மருத்துவமனைச் சுற்றாடலில் தாம் கிளஸ்டர் குண்டின் சிதறல்களைக் கண்டு பிடித்ததாக ஐ.நாவின் உள்ளூர் பணியாளர்கள் என்னிடம் கூறியிருந்தனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் இருந்த நோயாளர்கள் கிளஸ்டர் குண்டுகளால் காயமடைந்ததாகக் கூறியதை அடுத்து அந்த மருத்துவமனை புதுமாத்தாளனுக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.

comment closed