கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை (90,889 பேர்) 25.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் நவம்பர் வரையான பதினொரு மாதகாலப் பகுதியில் சுமார் 758,458 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 33.1 சதவீத அதிகரிப்பாகும். அதிகளவான சுற்றுலா பயணிகள் (281,484 பேர்) மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்தே வருகை தந்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு முழுவதும் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையினை (654,476 பேர்), இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சமன் செய்ததுடன், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்து வருகின்றது. இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சு இந்த ஆண்டில் 800,000 சுற்றுலா பயணிகளின் வருகையினை எதிர் பார்த்துள்ள நிலையில், இது வரை 758,458 சுற்றுலா பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Home » பொருண்மியம் » இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 25.8% சதவீதத்தினால் அதிகரித்துள்ளது
comment closed