Home » செய்தி » 2011 இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

2011 இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைப்பு

பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சனத்தொகை மதிப்பீடு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்கள அதிகாரியொருவர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். சனத்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான ஆவணங்களை அச்சிடுவதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் சனத்தொகை கணக்கெடுப்புப் பணிகளை அடுத்த வருட ஆரம்பத்தில் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். கணக்கெடுப்புக்கான ஆவணங்களை அச்சிடுவதற்காக அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், திருப்தியளிக்கும் வகையில் அச்சிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முடியுமானவரை மேற்படி ஆவணங்களை விரைவில் அச்சிட்டு ஒவ்வொரு மாவட்ட செயலாளர் காரியாலயங்களுக்கும் அவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொகை மதீப்பீட்டுக்குப் பயன்படுத்தப்படவிருந்த ஆவணங்கள் அச்சுப் பிழையுடன் இருந்ததாக ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

comment closed