Home » முக்கிய செய்திகள் » அம்பாறையில் காற்றுடன் கடும்மழை; மக்களின் இயல்பு வாழ்வு பெரும் பாதிப்பு

அம்பாறையில் காற்றுடன் கடும்மழை; மக்களின் இயல்பு வாழ்வு பெரும் பாதிப்பு

கடந்த மூன்று தினங்களாக அம்பாறை மாவட்டத்தில் காற்றுடன் கடும்மழை பெய்கிறது. இந்த மழையால் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள மக்களின் இயல்பு வாழ்வு பாதிக் கப்பட்டுள்ளது.

அத்தோடு தாழ்ந்த பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதால் அந்தப் பகுதியில் குடியிருந்த குடும்பங்கள் முன் எச்சரிக்கையாக வேறு இடங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.

மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு பொது இடங்களில் மீண்டும் தங்கியுள்ளார்கள்.

மழையோடு பலத்த காற்று வீசுவதாலும் கடல் கொந்தளிப்பாக இருப்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது, கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகள் கூட கடல் கொந்தளிப்பால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெய்து கொண்டிருக்கும் மழையால் மாவட்டத்தின் கரையோரப் பகுதியிலுள்ள வீதிகள் எல்லாம் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு போக்குவரத்துச் செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பல இடங்களில் கொங்கிறீட் வீதிகள் அமைக்கப்பட்ட போதிலும் அவை முழுமையாகப் பூர்த்திசெய்யப்படா மையாலும், வடிகான்கள் பூர்த்தி செய்யப்படாமையாலும் வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது.
இதேவேளை, பல வீதிகளுக்கு மேலாக வெள்ள நீர் பாய்ந்து செல்கின்றன. அத்து டன், கல்முனை அம்பாறை பிரதான வீதியின் மாவடிப் பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் போக நெல் விதைப்பு வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், விதைக்கப்பட்ட வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

comment closed