Home » விளையாட்டு » முப்பது வருடங்களின் பின்னர் சதுரங்கம் வைத்தீஸ்வராவில்

முப்பது வருடங்களின் பின்னர் சதுரங்கம் வைத்தீஸ்வராவில்

இலங்கை சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்படும் கழகங்கள் பாடசாலைக் கழகங்களுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி 30 வருடங்களின் பின்னர் வட மாகாணத்தில் இடம் பெறவுள்ளது.

இந்தப் போட்டி எதிர்வரும் 10, 12, 13 ஆம் திகதிகளில் யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியில் இடம்பெறவுள்ளது.மேற்படி போட்டியை யாழ். மாவட்ட சதுரங்கச் சங்கம் நடத்துகின்றது.இந்தப் போட்டி திறந்த போட்டியாகவும் ஆண், பெண்களுக்கான போட்டியாகவும் பெண்கள் மட்டுமே பங்குபற்றும் போட்டியாகவும் இடம்பெறவுள்ளது.ஒரு அணியில் 6 வீரர்களும் ஒருவர் பதில் வீரராகவும் 7 பேர் போட்டியில் பங்கு கொள்ள முடியும் எனப் போட்டியாளர் தெரிவித்தார்.

comment closed