Home » முக்கிய செய்திகள் » மீண்டும் பொலிஸில் பதிய உத்தரவு

மீண்டும் பொலிஸில் பதிய உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளில் தங்கியிருப்பவர்கள் விவரங்கள் பொலிசாரால் திரட்டப்படுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வீடுகளில் நிரந்தரமாகத் தங்கியிருப்போர் மற்றும் தற்காலிகமாக தங்கிருப்போர் விவரங்கள் கேட்கப்படுவதாக உள்ளூர்வாசிகள் கூறுகிறார்கள்.

பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 76 வது பிரிவின் கீழ் பொலிசாருக்குள்ள அதிகாரத்தின் கீழ் இந்தத் தகவல்கள் கேட்கப்படுவதாகத் தெரிகிறது.

பொலிசார் இது குறித்து தினசரிகள் ஊடாகவோ அல்லது பொதுப்படையாக ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிக்காமல் இப்பதிவினை மேற்கொள்ளவது மக்கள் மத்தியில் பயத்தினையும், பீதியினையும் உருவாக்குகின்றது என அப்பகுதி மக்கள் அச்சம் அடைவதாக தெரிவித்தார்.

ஆனால் இது குறித்து வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவது சாத்தியமில்லை என்றும் மக்கள் தெரிவித்தார்.

comment closed