Home » ஆய்வு » பயங்கரவாதத்தை வென்றதற்காக சிறிலங்காவுக்கு சான்றிதழ் கொடுக்கும் இந்தியா – அனலை நிதிஸ் ச. குமாரன்

பயங்கரவாதத்தை வென்றதற்காக சிறிலங்காவுக்கு சான்றிதழ் கொடுக்கும் இந்தியா – அனலை நிதிஸ் ச. குமாரன்

பதினேழு நாடுகளுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய முக்கிய காரண கர்த்தாவாக இருந்த இந்தியா, திடீரென சிறிலங்காவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்த வெற்றி நாடு என்கிற பட்டத்தை வழங்கியுள்ளது. தனது அயல்நாடுகளில் இஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதன் மூலமாக தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளலாம் என்கிற வியூகத்தில் ஏவி விடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா எப்படி அழிக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
நாடுகள் சாராத அமைப்புக்களினால் ஏவப்படும் பயங்கரவாதத்தை பயங்கரவாதம் என்று கூறினால், நாடுகளினால் கட்டவிழ்த்தப்படும் பயங்கரவாதத்தை எப்படி அழைப்பது என்பதைக் கூறவே தயங்குகிறார்கள் உலகின் பல நாடுகள். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல.
பயங்கரவாதத்திற்கு உண்மையான கருத்து என்ன என்கிற வாதத்தை ஐக்கிய நாடுகள் சபை கூடக் கூற மறுக்கிறது. அதற்கான கருத்தே தனது சட்ட யாப்பில் இல்லையென்று அடித்துக்கூறுகிறது ஐ.நா.  இப்படியிருக்க எவ்வாறு தனிப்பட்ட நாடுகள் பயங்கரவாதம் என்பதற்கு பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறத் தகுதியுள்ளது என்று கேட்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
பயங்கரவாதத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துப்பார்க்கிறார்கள் அரசியல் விஞ்ஞானிகள். தனிப்பட்ட அமைப்புக்களினாலேயோ அல்லது தனிமனிதர்களினாலேயோ ஏவப்படும் பயங்கரவாதம், அரச பயங்கரவாதம் மற்றும் அரசுகளினால் வேலைக்குட்படுத்தப்படுபவர்களினால் தொடுக்கப்படும் பயங்கரவாதம் என பயங்கரவாதத்தை பிரித்துப்பார்க்கிறார்கள் அரசியல் விஞ்ஞானிகள்.
உலகின் பல நாடுகள் தனிப்பட்ட அமைப்புக்களினாலேயோ அல்லது தனிமனிதர்களினாலேயோ ஏவப்படும் தாக்குதல்களையே பெரிதாகக் கவனித்து, அறிக்கைகளையும் விடுகிறார்கள். அரச பயங்கரவாதத்தையோ அல்லது அரசுகளினால் வேலைக்குட்படுத்தப்படுபவர்களினால் ஏவப்படும் தாக்குதல்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் பல உலக நாடுகள்.
சிறிலங்கா என்கிற நாடு சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராகத் தொடுத்த பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டும் காணாமல் இருந்தார்கள் பல நாடுகள்.  குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற 17-க்கும் அதிகமான நாடுகளின் வழிநடத்தலில் இடம்பெற்ற ஈழத்தின் நான்காம் கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தமது ஆயுத பலத்தை மௌனிக்கச் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு இந்தியாவும் மிக முக்கிய பொறுப்பு. இது இவ்வாறிருக்க முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைக் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது.
இந்தியாவின் நயவஞ்சகம்
ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் சிறிலங்கா அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக இந்தியா கூறிவந்தாலும் அதன் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்தும் திரைமறைவு செயற்பாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை.
இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குறிப்பாக ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் மற்றும் மேனன் போன்ற தமிழின விரோதிகளின் தவறுதலான வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டே வந்தது. ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கொள்கையில் சிறிதளவேனும் மாற்றத்தை இதுநாள் வரை காணக்கூடியதாக இல்லை.
இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறிலங்கா நல்லுறவைப் பேணிவருவதுடன் பல உடன்பாடுகளையும் செய்கிறது.  இந்த நாடுகளின் செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவே கருத வேண்டியிருந்தும், இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுடன் நட்புறவைப் பேணிவருகிறது. சிறிலங்காவுடன் பரஸ்பர நட்புறவைப் பேணிவருவதுடன் ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது.  இந்தியாவின் இச்செயல்கள் இன்று நேற்று நடப்பவையல்ல. ஏறத்தாள இரு தசாப்தங்களாக இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன.
பல புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஆராய்சி நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் பெருகி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று கூறிய பின்னரும் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. பிரச்சினைகளை வளரவிட்ட  பின்னர் தீர்வு காண்பதென்பது சிக்கலானதொன்று என்பதை இந்தியா இன்னும் உணராமலுள்ளதா என வினாவுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். இந்தியாவின் தமிழ் மீனவர்கள் சிங்கள அரச காடையர்களால் நாளும் பொழுதும் துன்புறுத்தப்படுவதுடன் பலர் படுகொலையும் செய்யப்படுகிறார்கள்.
சிங்கள அரச படையினர் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளுக்குத் துணை போவது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள்தான் அத்துமீறி சிறிலங்காவின் கடற்பகுதிக்குச் செல்லுகிறார்கள் என்று கூறுகிறது இந்திய நடுவன் அரசு.  தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு சம்பந்தமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தீர்வு காண இந்திய அரசு முன்வரத் தயாராகவில்லை என்பதனையே இவ்வாறான பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது.  தமிழகத் தலைவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பல விதமான போராட்டங்களை நடத்தினார்கள். இருந்தும் என்ன பயன் என்று வினாவுகிறார்கள் தமிழக மீனவர்கள்.
இந்தியாவின் எதிர்ப்பைக் கூறுவதற்கு கொழும்பு செல்லும் நடுவன் அரசின் தூதுவர்கள் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து களியாட்டங்களில் கலந்து சிறப்பித்துவிட்டு நாடு திரும்பும் நிலையே நிலவுகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, தனது எல்லைக்கு உட்பட்டு வாழும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகவும் தனது செயற்பாடுகளை செய்கிறது இந்திய மத்திய அரசு.  இதனுடைய நயவஞ்சகத்தை அறிந்தும் அறியாதது போன்று இருக்கிறார்கள் தமிழக தலைவர்கள் என்பது வேதனைக்குரிய விடயமே.
பயங்கரவாதம் குறித்து புத்தி சொல்லும் இந்தியா
தனது நாட்டு மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏவும் நாட்டை புகழ்ந்து தள்ளுகிறார் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங் தலைமையில் அக்டோபர் 10-ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. கடந்த 1962-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் தோற்றுவிக்கப்பட்டது. இதில், பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள், ஆறு தேசிய கட்சிகளின் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், வர்த்தக நிறுவன தலைவர்கள் என 147 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில், ஜாதிப் பெயர்களால் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்களின் நிலையை கையாள மாநில அரசுகள் மற்றும் காவல்துறையினர் எடுக்க வேண்டிய வழிமுறைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைதல் உட்பட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது: ‘நாடு தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் பயங்கரவாதமும், நக்சலிசமும் மிக முக்கிய சவால்களாக உள்ளன. எந்தக் காரணத்தைக் கொண்டும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என்பதையே சமீபத்திய டில்லி உயர்நீதிமன்றக் குண்டுவெடிப்புச் சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது. பயங்கரவாதம் என்னும் கோரமான அனுபவத்திற்கு திரும்பத் திரும்ப இந்த நாடு உட்படுவது வேதனையளிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் எதிர்மறைக் கருத்துக்களை வைப்பதற்கென நிறைய அமைப்புகளும் வழிகளும் உள்ளன. வன்முறை இல்லாத வழிகளில் எந்தக் கருத்துகளையும் எடுத்து வைக்கலாம்.’
‘சித்தாந்தத்தின் பேரில் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. இங்கு மாநில முதல்வர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கூடியுள்ளனர். பயங்கரவாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறவிடமாட்டோம். எத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதை முழு மூச்சாக எதிர்கொண்டு முறியடிப்பது என அனைவருமே சபதம் ஏற்க வேண்டும். அதையே இம்மாநாட்டு செய்தியாக அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன். புலனாய்வு வசதிகள், உளவு சேகரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தேசிய உளவு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு, உளவு தகவல்கள் நிறைய சேகரிக்கப்பட்டு அனைவருடனும் பரிமாற்றமும் செய்யப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தேசிய பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.’
‘பயங்கரவாதச் சம்பவம் எங்காவது நிகழ்ந்தால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சம்பவ இடத்திற்கு இந்தப் படை சென்று விடும். கடற்கரை ஓரங்களிலும் பாதுகாப்பு வசதிகள் பல மடங்கு உயர்த்தப்பட்ட வண்ணம் உள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் முக்கிய வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 29 வழக்குகள் அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு அதில் 20 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு விடயங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் மட்டுமல்லாது மாநிலங்களுக்கு இடையேயும் தகவல் பரிமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.’
‘சமூகத்தில் மக்கள் மத்தியில் எழுப்பப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அமைதி வழியில் நடக்கும் போராட்டமா அல்லது குற்றப் பின்னணியுடன் நடக்கும் போராட்டமா என்பதை இனம் காண வேண்டும்.அதன் பிறகே பொலிஸாரும் மாவட்ட நிர்வாகமும் தங்களது அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் துர்திஷ்டவசமான சம்பவங்கள் நிகழும். பொதுமக்களை கையாளும் போது மிகுந்த கவனமும் ,பொறுமையும் அவசியமாக இருந்தால் மட்டுமே, சமூக அமைதியும் மத நல்லிணக்கத்தையும் காத்திட முடியும்’ என்று கூறினார் மன்மோகன் சிங். தனதுரையில் சிறிலங்காவை உதாரணம் காட்டி பேசினார் சிங். சிறிலங்கா போன்று பல நாடுகள் பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என்று கூறி தனதுரையை தொடர்ந்தார்.
சிறிலங்கா என்கிற நாடு தமிழர்களுக்கு எதிராக செய்த போர்க் குற்றத்திற்காக பல மேற்குலக நாடுகளினால் கண்டனத்திற்குட்பட்டுள்ள இந்நிலையில் மன்மோகன் சிங்கின் கருத்து இந்தியாவின் கபடத்தனத்தை காட்டி நிற்கின்றது. தனது வரையறைக்குட்பட்டு வாழும் மக்களை கொன்று குவிக்கும் அரசிற்கு நற்சான்றிதல் கொடுக்கும் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களை இன்றும் தமிழ் நாட்டு மக்கள் தமது நாட்டின் பிரதமர் என்று கூறி தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

பதினேழு நாடுகளுடன் சேர்ந்து விடுதலைப்புலிகளுடன் போர் செய்ய முக்கிய காரண கர்த்தாவாக இருந்த இந்தியா, திடீரென சிறிலங்காவுக்கு பயங்கரவாதத்தை ஒழித்த வெற்றி நாடு என்கிற பட்டத்தை வழங்கியுள்ளது. தனது அயல்நாடுகளில் இஸ்திரத்தன்மையை இல்லாதொழிப்பதன் மூலமாக தனது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளலாம் என்கிற வியூகத்தில் ஏவி விடப்படும் பயங்கரவாதத்தை இந்தியா எப்படி அழிக்கப்போகிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது.  நாடுகள் சாராத அமைப்புக்களினால் ஏவப்படும் பயங்கரவாதத்தை பயங்கரவாதம் என்று கூறினால், நாடுகளினால் கட்டவிழ்த்தப்படும் பயங்கரவாதத்தை எப்படி அழைப்பது என்பதைக் கூறவே தயங்குகிறார்கள் உலகின் பல நாடுகள். இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. பயங்கரவாதத்திற்கு உண்மையான கருத்து என்ன என்கிற வாதத்தை ஐக்கிய நாடுகள் சபை கூடக் கூற மறுக்கிறது. அதற்கான கருத்தே தனது சட்ட யாப்பில் இல்லையென்று அடித்துக்கூறுகிறது ஐ.நா.  இப்படியிருக்க எவ்வாறு தனிப்பட்ட நாடுகள் பயங்கரவாதம் என்பதற்கு பல்வேறு விதமான கருத்துக்களைக் கூறத் தகுதியுள்ளது என்று கேட்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.பயங்கரவாதத்தை மூன்று பிரிவுகளாக பிரித்துப்பார்க்கிறார்கள் அரசியல் விஞ்ஞானிகள். தனிப்பட்ட அமைப்புக்களினாலேயோ அல்லது தனிமனிதர்களினாலேயோ ஏவப்படும் பயங்கரவாதம், அரச பயங்கரவாதம் மற்றும் அரசுகளினால் வேலைக்குட்படுத்தப்படுபவர்களினால் தொடுக்கப்படும் பயங்கரவாதம் என பயங்கரவாதத்தை பிரித்துப்பார்க்கிறார்கள் அரசியல் விஞ்ஞானிகள். உலகின் பல நாடுகள் தனிப்பட்ட அமைப்புக்களினாலேயோ அல்லது தனிமனிதர்களினாலேயோ ஏவப்படும் தாக்குதல்களையே பெரிதாகக் கவனித்து, அறிக்கைகளையும் விடுகிறார்கள். அரச பயங்கரவாதத்தையோ அல்லது அரசுகளினால் வேலைக்குட்படுத்தப்படுபவர்களினால் ஏவப்படும் தாக்குதல்களைக் கண்டும் காணாமல் இருக்கிறார்கள் பல உலக நாடுகள்.  சிறிலங்கா என்கிற நாடு சிறுபான்மைத் தமிழர்களுக்கெதிராகத் தொடுத்த பயங்கரவாதத் தாக்குதல்களை கண்டும் காணாமல் இருந்தார்கள் பல நாடுகள்.  குறிப்பாக இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற 17-க்கும் அதிகமான நாடுகளின் வழிநடத்தலில் இடம்பெற்ற ஈழத்தின் நான்காம் கட்டப் போரில் விடுதலைப்புலிகள் தமது ஆயுத பலத்தை மௌனிக்கச் செய்ய வற்புறுத்தப்பட்டார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதற்கு இந்தியாவும் மிக முக்கிய பொறுப்பு. இது இவ்வாறிருக்க முன்னுக்கு பின் முரணான கருத்துக்களைக் கடந்த பல வருடங்களுக்கு மேலாக இந்திய அரசு தெரிவித்து வருகிறது.  இந்தியாவின் நயவஞ்சகம்ராஜீவ் மரணத்திற்குப் பின்னர் சிறிலங்கா அரசியலில் நேரடித் தலையீட்டிலிருந்து ஒதுங்கிக் கொண்டதாக இந்தியா கூறிவந்தாலும் அதன் உளவுத்துறை மற்றும் வெளியுறவுத்துறையைச் சார்ந்த அதிகார வர்க்கம் தொடர்ந்தும் திரைமறைவு செயற்பாடுகளில் ஈடுபட்டே வந்துள்ளது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் இந்தியாவின் ஆளுகையை நிலை நிறுத்துவதற்காகவும் இந்திய அதிகார வர்க்கம் அன்று தொட்டு இன்று வரை மேற்கொண்டு வந்த சதி நடவடிக்கைகள் ஏராளமானவை. இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் ராஜதந்திரிகள் குறிப்பாக ஜே.என்.டிக்ஸிட், எம்.கே.நாராயணன் மற்றும் மேனன் போன்ற தமிழின விரோதிகளின் தவறுதலான வழிகாட்டுதலில் இந்திய மத்திய அரசுகளும் ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டுக் கொண்டே வந்தது. ஈழத்தமிழர் மீதான இந்தியாவின் கொள்கையில் சிறிதளவேனும் மாற்றத்தை இதுநாள் வரை காணக்கூடியதாக இல்லை.இந்தியாவின் பரம எதிரி நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானுடன் சிறிலங்கா நல்லுறவைப் பேணிவருவதுடன் பல உடன்பாடுகளையும் செய்கிறது.  இந்த நாடுகளின் செயற்பாடுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகவே கருத வேண்டியிருந்தும், இந்தியா தொடர்ந்தும் சிறிலங்காவுடன் நட்புறவைப் பேணிவருகிறது. சிறிலங்காவுடன் பரஸ்பர நட்புறவைப் பேணிவருவதுடன் ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வேலைகளிலும் இறங்கியுள்ளது.  இந்தியாவின் இச்செயல்கள் இன்று நேற்று நடப்பவையல்ல. ஏறத்தாள இரு தசாப்தங்களாக இப்படியான செயற்பாடுகள் நடைபெறுகின்றன. பல புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஆராய்சி நிறுவனங்கள் சீனாவின் ஆதிக்கம் இந்திய உபகண்டத்தில் பெருகி வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் என்று கூறிய பின்னரும் இந்தியா அதனைக் கவனத்தில் எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. பிரச்சினைகளை வளரவிட்ட  பின்னர் தீர்வு காண்பதென்பது சிக்கலானதொன்று என்பதை இந்தியா இன்னும் உணராமலுள்ளதா என வினாவுகின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். இந்தியாவின் தமிழ் மீனவர்கள் சிங்கள அரச காடையர்களால் நாளும் பொழுதும் துன்புறுத்தப்படுவதுடன் பலர் படுகொலையும் செய்யப்படுகிறார்கள்.  சிங்கள அரச படையினர் செய்யும் அத்துமீறல் நடவடிக்கைகளுக்குத் துணை போவது மட்டுமின்றி, தமிழக மீனவர்கள்தான் அத்துமீறி சிறிலங்காவின் கடற்பகுதிக்குச் செல்லுகிறார்கள் என்று கூறுகிறது இந்திய நடுவன் அரசு.  தமிழர்கள் மற்றும் தமிழ்நாடு சம்பந்தமான எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் தீர்வு காண இந்திய அரசு முன்வரத் தயாராகவில்லை என்பதனையே இவ்வாறான பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகிறது.  தமிழகத் தலைவர்கள் கடந்த பல ஆண்டுகளாக பல விதமான போராட்டங்களை நடத்தினார்கள். இருந்தும் என்ன பயன் என்று வினாவுகிறார்கள் தமிழக மீனவர்கள்.இந்தியாவின் எதிர்ப்பைக் கூறுவதற்கு கொழும்பு செல்லும் நடுவன் அரசின் தூதுவர்கள் சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்து களியாட்டங்களில் கலந்து சிறப்பித்துவிட்டு நாடு திரும்பும் நிலையே நிலவுகிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி, தனது எல்லைக்கு உட்பட்டு வாழும் தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகவும் தனது செயற்பாடுகளை செய்கிறது இந்திய மத்திய அரசு.  இதனுடைய நயவஞ்சகத்தை அறிந்தும் அறியாதது போன்று இருக்கிறார்கள் தமிழக தலைவர்கள் என்பது வேதனைக்குரிய விடயமே. பயங்கரவாதம் குறித்து புத்தி சொல்லும் இந்தியாதனது நாட்டு மக்களுக்கு எதிராக பயங்கரவாதத்தை ஏவும் நாட்டை புகழ்ந்து தள்ளுகிறார் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங். மன்மோகன் சிங் தலைமையில் அக்டோபர் 10-ஆம் தேதி தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடந்தது. கடந்த 1962-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவால் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் தோற்றுவிக்கப்பட்டது. இதில், பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளின் எதிர்கட்சித் தலைவர்கள், மூத்த மத்திய அமைச்சர்கள், ஆறு தேசிய கட்சிகளின் தலைவர்கள், அனைத்து மாநில முதல்வர்கள், வர்த்தக நிறுவன தலைவர்கள் என 147 பேர் இடம் பெற்றுள்ளனர். இக்கூட்டத்தில், ஜாதிப் பெயர்களால் இளைஞர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள், மக்கள் போராட்டங்களின் நிலையை கையாள மாநில அரசுகள் மற்றும் காவல்துறையினர் எடுக்க வேண்டிய வழிமுறைகள், சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான பாகுபாடுகளைக் களைதல் உட்பட பல பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங் பேசியதாவது: ‘நாடு தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் பயங்கரவாதமும், நக்சலிசமும் மிக முக்கிய சவால்களாக உள்ளன. எந்தக் காரணத்தைக் கொண்டும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது என்பதையே சமீபத்திய டில்லி உயர்நீதிமன்றக் குண்டுவெடிப்புச் சம்பவம் நமக்கு உணர்த்தியுள்ளது. பயங்கரவாதம் என்னும் கோரமான அனுபவத்திற்கு திரும்பத் திரும்ப இந்த நாடு உட்படுவது வேதனையளிக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில் எதிர்மறைக் கருத்துக்களை வைப்பதற்கென நிறைய அமைப்புகளும் வழிகளும் உள்ளன. வன்முறை இல்லாத வழிகளில் எந்தக் கருத்துகளையும் எடுத்து வைக்கலாம்.’ ’சித்தாந்தத்தின் பேரில் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிப்பதை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் ஏற்றுக் கொள்ளாது. இங்கு மாநில முதல்வர்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் கூடியுள்ளனர். பயங்கரவாத சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறவிடமாட்டோம். எத்தகைய அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதை முழு மூச்சாக எதிர்கொண்டு முறியடிப்பது என அனைவருமே சபதம் ஏற்க வேண்டும். அதையே இம்மாநாட்டு செய்தியாக அளிக்க அனைவரையும் வேண்டுகிறேன். புலனாய்வு வசதிகள், உளவு சேகரிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.தேசிய உளவு கட்டுப்பாட்டு மையம் ஏற்படுத்தப்பட்டு, உளவு தகவல்கள் நிறைய சேகரிக்கப்பட்டு அனைவருடனும் பரிமாற்றமும் செய்யப்படுகிறது. இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் தேசிய பாதுகாப்பு படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.”பயங்கரவாதச் சம்பவம் எங்காவது நிகழ்ந்தால் அடுத்த ஒரு மணி நேரத்திற்குள்ளேயே சம்பவ இடத்திற்கு இந்தப் படை சென்று விடும். கடற்கரை ஓரங்களிலும் பாதுகாப்பு வசதிகள் பல மடங்கு உயர்த்தப்பட்ட வண்ணம் உள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் முக்கிய வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 29 வழக்குகள் அந்த அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டு அதில் 20 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பாதுகாப்பு விடயங்களில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையில் மட்டுமல்லாது மாநிலங்களுக்கு இடையேயும் தகவல் பரிமாற்றம் செய்ய நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.”சமூகத்தில் மக்கள் மத்தியில் எழுப்பப்படும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களின் போது பொலிஸார் மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அமைதி வழியில் நடக்கும் போராட்டமா அல்லது குற்றப் பின்னணியுடன் நடக்கும் போராட்டமா என்பதை இனம் காண வேண்டும்.அதன் பிறகே பொலிஸாரும் மாவட்ட நிர்வாகமும் தங்களது அதிகாரத்தை கையில் எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் துர்திஷ்டவசமான சம்பவங்கள் நிகழும். பொதுமக்களை கையாளும் போது மிகுந்த கவனமும் ,பொறுமையும் அவசியமாக இருந்தால் மட்டுமே, சமூக அமைதியும் மத நல்லிணக்கத்தையும் காத்திட முடியும்’ என்று கூறினார் மன்மோகன் சிங். தனதுரையில் சிறிலங்காவை உதாரணம் காட்டி பேசினார் சிங். சிறிலங்கா போன்று பல நாடுகள் பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என்று கூறி தனதுரையை தொடர்ந்தார். சிறிலங்கா என்கிற நாடு தமிழர்களுக்கு எதிராக செய்த போர்க் குற்றத்திற்காக பல மேற்குலக நாடுகளினால் கண்டனத்திற்குட்பட்டுள்ள இந்நிலையில் மன்மோகன் சிங்கின் கருத்து இந்தியாவின் கபடத்தனத்தை காட்டி நிற்கின்றது. தனது வரையறைக்குட்பட்டு வாழும் மக்களை கொன்று குவிக்கும் அரசிற்கு நற்சான்றிதல் கொடுக்கும் மன்மோகன் சிங் போன்ற தலைவர்களை இன்றும் தமிழ் நாட்டு மக்கள் தமது நாட்டின் பிரதமர் என்று கூறி தலைகுனிய வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.

comment closed