Home » கல்வி » பதினையாயிரம் மாணவர்களின் விசாக்களை இரத்துச் செய்தது அவுஸ்திரேலியா

பதினையாயிரம் மாணவர்களின் விசாக்களை இரத்துச் செய்தது அவுஸ்திரேலியா

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் 15066 பேரின் விசாக்களை பல்வேறு காரணங்களுக்காக அவுஸ்திரேலியா இரத்து செய்துள்ளது.

கடந்த ஆண்டில் அவுஸ்திரேலியா குடியேற்றத்துறை மொத்தம் 15066 வெளிநாட்டு மாணவர்களின் விசாக்களை இரத்து செய்துள்ளது. இவர்களில் 3624 மாணவர்கள் தேர்வுகளில் தோல்வியுறுதல் அல்லது வகுப்புக்களுக்குச் செல்லாதது போன்ற காரணங்களுக்காக நாட்டை விட்டு வெளியேற்றப்படும் நிலையில் உள்ளனர்.

மேலும் 2235 பேர் தாங்கள் உண்மையில் சேர்ந்த வகுப்புக்களுக்குச் செல்லாமல் சட்ட விரோதமாக வேலை பார்த்து வந்துள்ளதாகவும் பெண்கள் சிலர் மாணவர் விசாக்களைப் பயன்படுத்தி பாலியல் தொழிலிலும் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் கூறியே விசாக்கள் ரத்துச் செய்ய்யபட்டுள்ளன.

விசா இரத்து செய்யப்பட்ட மாணவர்களில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் அதற்கடுத்த நிலையில் சீன மாணவர்கள் இருப்பதாகவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் கடந்த ஜீன் மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி மொத்தம் 3,32,709 வெளிநாட்டு மாணவர்கள் உள்ளனர். இவர்களில் பலர் பல்கலைக்கழகங்களில் கற்கையில் ஈடுபட்டுள்ளனர். பலர் தொழிற்பயிற்சி பட்டயப்படிப்பு படித்து வருகின்றனர்.

அங்குள்ள வெளிநாட்டு மாணவர்களில் சீன மாணவர்கள் அதிகளவிலும் அடுத்த நிலையில் இந்திய மாணவர்களும் கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

comment closed