Home » கல்வி » இம் முறை 93.5 வீதமான மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

இம் முறை 93.5 வீதமான மாணவர்கள் தோற்றியுள்ளனர்.

அடுத்த வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள யாழ். மாவட்ட மாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொது தகவல் தொழிநுட்பப் பரீட்சைக்கு எதிர்பார்த்ததைவிடவும் இம்முறை அதிகமான மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தப் பரீட்சையைப் பொறுத்தவரையில் இம்முறை ஒரு சாதனை என்றுதான் கூற வேண்டும் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்தப் பரீட்சை யாழ். மாவட்டத்தில் இரண்டு நிலையங்களில் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம் பிரிவு 1 இல் கோப்பாய்க் கோட்டம் தவிர்ந்த யாழ். வலயம், தென்மராட்சி வலயம், தீவக வலயம் ஆகிய வலயங்கள் உள்ளடக்கப்பட்டு பரீட்சை நடைபெற்றது.
இந்தப் பிரிவில் இம் முறை 93.5 வீதமான மாணவர்கள் தோற்றியுள்ளனர் என்று யாழ்.வலயத்திட்டமிடல் அதிகாரி எஸ். ரவீந்திரநாதன் தெரிவித்தார். இதற்கு முன்னர் சுமார் 35 முதல் 40 வீதமான மாணவர்களே தோற்றி வந்த னர். முன்னரைவிட பொதுத்தகவல் தொழில் நுட்பப்பாடம் தற்போது முக்கியத்துவப்படுத்தப்படுகின்றது. மாணவர்களும் அதிக ஆர்வத்துடன் இந்தப் பாடத்தைக் கற்று வருகின்றனர் என்றார் அவர்.
அதேபோன்று யாழ்ப்பாணம் பிரிவு 2இல் கோப்பாய் கோட் டம், வலிகாம வலயம், வடமராட்சி வலயம் ஆகிய வலயங்களுக்குப் பரீட்சை நடைபெற்றது. இந்தப் பிரிவில் இம்முறை 99 வீதமான மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர் என்று பிராந்திய சேகரிப்பு நிலைய உத்தியோகத்தர் ஆ.இராசேந்திரன் தெரிவித்தார்.
இந்தப்பரீட்சைப் பெறுபேறு இம்முறை தொடக்கம் ஜீ.சீ.ஈ உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுப்படிவத்துடன் இணைத்து வெளியிடப்படவுள்ளதனால் முன்னரைவிட இம்முறை அதிக மாணவர்கள் இந்தப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர். இந்தப்பாடத்தைக் கற்பிப்பதற்கு முன்னர் தகுதியான ஆசிரியர்கள் குறைவாகவே காணப்பட்டனர். தற்போது அந்த நிலை மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்பப்பாடத்தின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர்ந்துள்ளனர் என்கின்றனர் கல்வி அதிகாரிகள்.

comment closed