Home » பொருண்மியம் » புத்தளம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு.

புத்தளம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு.

கடுமையான வெயில், மழையின்மை போன்றவற்றின் காரணமாக புத்தளம் பகுதி கிணறுகளில் நீர் வற்றிப் போயுள்ளன.

மேட்டுப் பகுதிகளில் வாழும் மக்கள் தமது பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல், தாழ்வான இடங்களுக்கு சென்று குடிநீர் கொண்டுவர வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகியுள்ளனர். சிலவேளைகளில் இவர்கள் குடிநீருக்காக பத்து முதல் பதினைந்து கிலோமீட்டர் தூரம் வரை செல்லவேண்டிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

தில்லையடி, ஆனைமடு, முண்டல் போன்ற பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல கிராமங்களில் இவ்வாறான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் கிராமங்களுக்கு வெளியிடங்களிலிருந்து பவுசர் வண்டிகள் மூலம் குடிநீர் கொண்டு சென்று விநியோகிக்க பிரதேச செயலகங்கள் ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.

comment closed