ஜித்தா, சவூதி அரேபியா. வருடந்தோறும் தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் ‘இஃப்தார்’என்னும்’ நோன்பு திறக்கும் நிகழ்ச்சி’ நடத்துவது வழக்கம்.
அதுபோல் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று தஃபாரெஜ்-ஜித்தா சார்பில் ‘இஃப்தார்’ நிகழ்ச்சி ஹோட்டல் இம்பாலாவில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துக்கொண்டனர்.
வந்திருந்த அனைவருக்கும் நோன்பு திறப்பதற்காக நோன்பு கஞ்சி, பேரித்தம் பழம், சமோசா, பக்கோடா, பழ வகைகள், பழச்சாறு, கடல் பாசி மற்றும் மினரல் வாட்டர் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பல சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கலந்துக்கொண்டனர். குறிப்பாக இந்திய துணைத்தூதரகத்தை சேர்ந்த திரு முபாரக் (ஹஜ் கன்சுளார்), திரு. மூர்த்தி (சமுதாய நல கன்சுளார்), திரு. தாஸ் ஜெயக்குமார் (பாஸ்போர்ட் பிரிவு துணை-கண்சுளார்) மற்றும் ஜித்தா தமிழ் மன்றம், ஜெட்டா தமிழ் சங்கம், நம் நாடு, GRIT, MEPCO, IFT, HOPE Toastmasters Club மற்றும் தமிழ் தாவா கமிட்டி ஆகிய அமைப்புகளின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
அல்-அமான் கிராஅத்துக்குப்பின், சாலிஹ் மரைக்கார் வரவேற்புரையைத் தொடர்ந்து பிரபல பேச்சாளர் “#183ேக் வஜ்டி அக்காரி” இஸ்லாத்தின் நெறிமுறைப்படி வாழ்ந்தால் எப்படி எந்தப் பிரச்சனைகளிலும் எளிதாக வெற்றிப் பெறலாம்” என்று ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மல்லப்பன், சித்திக் மதனி, கமாலுதீன் ஆகியோர் ரமலான் மாதத்தின் சிறப்புகளையும், நோன்பின் அவசியத்தைப் பற்றியும் பேசியதோடு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தஃபாரெஜ்-ஜித்தாவின் சமூக சேவையை பாராட்டினர்.
நிகழ்ச்சியின் முடிவில் வந்திருந்த அனைவருக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டார்களால் அறுசுவை (இரவு) விருந்து பரிமாறப்பட்டது.
முன்னதாக பீர் முஹம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, நவாஸ் நன்றியுரை கூறினார்.
comment closed