Home » பொருண்மியம் » சூடேறும் வெங்காய விலை

சூடேறும் வெங்காய விலை

குடாநாட்டு சந்தைகளில் வெங்காயத்தின் விலைகள் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி தற்பொழுது இறக்குமதி செய்யப்பட்ட 1kg பெரிய வெங்காயம் 90-110 ரூபா வரையிலும் உள்ளூர் பெரிய வெங்காயம் 80-90 ரூபா வரையிலும் விலை அதிகரித்துள்ளன. இதே வேளை 1 kg பெரிய வெங்காயம் 60-70  ரூபா வரையில் இம்மாத ஆரம்பத்தில் விற்பனை செய்யப்பட்டதாக திருநெல்வேலி சந்தை வியாபாரிகள்

இதே போல சின்ன வெங்காயத்தின் விலைகளும் அதிரித்துள்ளன. தற்போது இறக்குமதி செய்யப்படும் 1 kg பெரிய வெங்காயத்திற்கு 19 ரூபா வரி விதிக்கப்படுகின்றது. இதனாலேயே வெங்காய விலைகள் சூடு பிடிக்கின்றன.

உள்ளூர் விவசாயிகளால் சிறு போகத்தில் செய்கை பண்ணப்பட்ட பெரிய வெங்காயம் தற்பொழுது சந்தைக்கு கொண்டு வரப்படும் நிலையில் இவ்வாறு இறக்குமதி வரி மற்றும் விற்பனை விலை அதிரித்துள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

comment closed