Home » ஊடக அறிக்கைகள், சிறப்புச் செய்திகள், முக்கிய செய்திகள் » உலக தமிழர் பேரவையின் கருனை முறையீடு

உலக தமிழர் பேரவையின் கருனை முறையீடு

ஒரு கண்ணுக்கு கண் என்று இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கூறினார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் கருனையானது மகாத்மா காந்தி அவர்களின் கருத்தை நிலைநாட்டுவது மற்றும் அல்லாமல் இந்தியாவின் பொருந்தன்மையை உலகத்திற்கும் எடுத்துக் கூறும்.

என்று  தூக்குத்தன்டனைக் கைதிகளான திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை தொடர்பாக உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட கருணை முறையீட்டு தெரிவித்து  இருக்கின்றது. இது தொடர்பாக உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட ஊடாக செய்தியின் முழு வடிவம் இத்துடன் இனைக்கப்படுள்ளது.

இந்திய ஜனாதிபதி மேதகு பிரதிபா தேவிசிங் பாடில் அவர்கள் முன்னால் இந்திய பிரதமர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன, திரு.முருகன்,  திரு.சாந்தன் அவர்களின் கருனை மனுவை நிராகரித்துள்ளார்.

முன்னால் இந்தியப் பிரதமர் இராஜிவ் காந்தி அவர்களின இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்க்கே ஒரு பேரிழப்பு ஆகும்.
ஒரு கண்ணுக்கு கண் என்று இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி அவர்கள் கூறினார்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் கருனையானது மகாத்மா காந்தி அவர்களின் கருத்தை நிலைநாட்டுவது மற்றும் அல்லாமல் இந்தியாவின் பொருந்தன்மையை உலகத்திற்கும் எடுத்துக் கூறும்.
திரு. காந்தி அவர்களின் கொலையிலும் அது விசாரிக்கப்பட்ட முறையிலும் பல்வேறு சர்ச்சைகளும் கேள்விகளும் பலராலும் எழுப்பப்பட்டுள்ளன. உலக தமிழர் பேரவையானது மேதகு இந்திய ஜனாதிபதி திருமதி. பிரதிபா பாட்டில் அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
மனித உரிமைகளுக்கான சர்வதேச பிரகடனம் மற்றும் இதர சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் கொடுமையான மனித தன்மையற்றஇ இழிவுபடுத்தப்படும் தன்டனைகளுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கின்றது.
எனவே குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு கருனை காட்டுவதே சர்வதேச சமூகத்தில் பலராலும் வரவேற்க்கப்படுகிறது.
உலக தமிழர் பேரவை

comment closed