Home » ஆய்வு, முக்கிய செய்திகள் » ஈழத்தமிழ் மக்களிற்கான மனிதநேயப் புரட்சி அவசியம்!-மனிதநேய ஆர்வலர்

ஈழத்தமிழ் மக்களிற்கான மனிதநேயப் புரட்சி அவசியம்!-மனிதநேய ஆர்வலர்

ஈழத்தமிழ் மக்களிற்க்கான மனிதநேயப் புரட்சி அவசியம் என்பதனை நாவாந்துறையில் பொதுமக்கள் மீதான தாக்குதல் வலியுறுத்துகின்றது, எனச் சுட்டிக்காட்டியுள்ள மனிதநேய ஆர்வலரும் வைத்தியக் கலாநிதியுமான டாக்டர். ஏஸ். யமுனாநந்தா. நாவாந்துறைச் சம்பவத்திற்க்கு தனது தனிப்பட்ட கடும் கண்டனத்தையும் தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 2009ம் ஆண்டு அழிவு மக்களிற்கு அணுக்குண்டின் வெடிப்பால் ஏற்பட்ட அழிவுக்கு சமனானதாகும். இவ்வழிவுக்கு நேரடியாகக் காரணமானவர்கள் 10பேர் வரையிலாகும்.

ஆனால் உலக தொழில்நுட்ப வளர்ச்சி ஒரு இனத்தினை முழுமையாக துடைத்தெறிய முற்பட்டது மாத்திரமல்ல அவ்வழிவுகளை மிகவும் சாதாரணமாக்கவும் பார்த்தது. வெள்ளம், பூகம்பம், எரிமலை, கடல்கோள் என்பனவற்றினால் அழிவு ஏற்படும் போது செய்தியாக நோக்கப்பட்டதோ அவ்வாறே ஈழத் தமிழினத்தின் அழிவும் சாதாரணமாக்கப்பட்டது.

மனிதநேயத்திற்கான நீதி விசாரணை ஈழத் தமிழினத்திற்கு மிகவும் அவசியம். இவ்வளவு அக்கிரமங்களையும் புரிந்து விட்டு இல்லை என திரும்பத் திரும்ப பொய்யினைக் கூறுவது சகிக்க முடியாதது. இதனை மனிதநேயத்தை அறிந்த மருத்துவர்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் அழுத்திக்கூறல் வேண்டும்.

எனவே யுத்தத்தில் ஈழத் தமிழ் மக்கள் மீது அநாகரிக கொலைத் தாக்குதல் நடைபெற்றமை தொடர்பாகவும் அதன் பின்பு அவர்களால் ஈழத் தமிழ் மக்களை நடத்தப்பட்ட விதம் குறித்து பொறுப்புக் கூறும் தன்மை இலங்கை அரசுக்கு உரியது.

இதனை இலங்கை அரசோ, சிங்கள இராணுவமோ, அனைத்துச் சிங்கள மக்களோ மறுக்குமிடத்து அவர்கள் தமிழ் மக்களிடம் இருந்து தூர விலகுவதாகவே கருதப்படல் வேண்டும். தமிழ் அரசியல்வாதிகள் மேற்கொள்ள வேண்டிய இராஜதந்திர நகர்வுகளிற்கு சில எடுகோள்கள் அவசியம்.

ஈழத் தமிழ் மக்கள் இலங்கையின் வடகிழக்கில் பாரம்பரிய தாயகத்தினை உடையவர்கள் என்பதனை சிங்களவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தமழர்களுக்கு சுயாட்சி உடைய அரசியல் தீர்வினை சிங்கள அரசு அளிக்காது.

ஈழத் தமிழ் மக்கள் அரசினால் படுகொலை செய்யப்பட்டமை பற்றிய குற்ற உணர்வு சிங்கள மக்களிடம் இல்லை. ஈழத் தமிழ் மக்களை அரசியல் இராணுவ ரீதியில் திட்டமிட்டு அடக்க, இலங்கை ஆட்சியாளர்கள் முனைப்புக்கொண்டு உள்ளனர்.

இலங்கையின் வடகிழக்கில் ஈழத் தமிழ் மக்கள் பாரம்பரிய தாயகத்தினை  அழிக்க இராணுவ, பொருளாதார, குடிசார் ஆக்கிரமிப்பினை தென்னிலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது. இதனை ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது.
இந்திய மத்திய அரசாங்கத்திற்கோ இந்திய வெளிவிவகாரத் திட்டமிடலிலோ கொழும்பை மையப்பட்டு ஈழ தமிழர்களின் மீதான அக்கறை மிகக்குறைவாக உள்ளது

மேற்கூறிய இலங்கை அரசியல் நிலையிலும், உலகம் தமிழ்மக்கள் குழுவை இன்னமும் பயங்கரவாதிகளாக கருதுவதாலும், 2009ம் ஆண்டு அழிவுகளிற்கு முறையான நீதி விசாரணை இன்மையினாலும் ஏற்பட்ட இடைவெளியே பொதுமக்கள் மீது இராணுவ அத்துமீறல் அதிகரிக்கக் காரணமாகின்றது.

comment closed