Home » விளையாட்டு » அணி வீரர்கள் ஒழுங்காக தம்மைத் தயார் செய்து கொள்ள போதிய அவகாசம் இருந்திருக்கவில்லை- தோனி.

அணி வீரர்கள் ஒழுங்காக தம்மைத் தயார் செய்து கொள்ள போதிய அவகாசம் இருந்திருக்கவில்லை- தோனி.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய படுதோல்வி அடைந்தமைக்குக் இந்திய அணி மோசமாக மட்டவீசியதே காரணம் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.

“இந்தத் தொடரில் ஒரு முறைகூட எமது அணி 300 ஓட்டங்களை தாண்டியிருக்கவில்லை என்பதிலிருந்தே நாங்கள் எந்த அளவுக்கு மோசமாக மட்டை பிடித்தோம் என்பது விளங்குகிறது” என திங்களன்று ஆட்டம் நிறைவுற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் அலட்சியமாக விளையாடவில்லை. ஆனால் இந்தத் தொடருக்கு முன்பாக தமது அணி வீரர்கள் ஒழுங்காக தம்மைத் தயார் செய்து கொள்ள போதிய அவகாசம் இருந்திருக்கவில்லை” என அவர் கூறினார்.

டெஸ்ட் தொடரைத் தோற்றிருந்தாலும், ஒரு நாள் தொடரில் அணியினை மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திருப்ப தானும் பயிற்சியாளர் டன்கன் பிளச்சரும் முயலுவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

comment closed