Home » விளையாட்டு » இவ்வருடத்துக்கான சிறந்த அணி தெரிவில் யாழ்.பல்கலைக்கழக அணி முன்னிலையில்

இவ்வருடத்துக்கான சிறந்த அணி தெரிவில் யாழ்.பல்கலைக்கழக அணி முன்னிலையில்

யாழ்.சென்றல் விளையாட்டுக்கழகம் நடத்தும் யாழ்.நகரில் 2010ம் ஆண்டிற்கான சிறந்த கழக அணி தெரிவு நிகழ்வில் கடந்த 23 ஆம் திகதி வரை நடைபெற்ற 75 போட்டிகளின்படி யாழ்.பல்கலைக்கழக அணி 44 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்திலுள்ளது.

ஜொலிஸ்ரார் கழக அணி 37 புள் ளிகளை பெற்று 2ம் இடத்திலும், யாழ். சென்றல் கழக அணி 28 புள்ளிகளை பெற்று 3ம் இடத்திலும், கே.சீ.சீ.சீ. கழக அணி 16 புள்ளிகளை பெற்று 4ம் இடத்திலும்உள்ளன. சிறி காமாட்சி கழக அணி 15 புள்ளி, யாழ்.ஜொனியன்ஸ் கழக அணி 11 புள்ளி ஆகியன 5, 6 ஆம் இடங்களிலும், கிறாஸ்கொப்பர்ஸ், அரியாலை சென்றல் கழக அணிகள் தலா 8 புள்ளிகளை பெற்று 7ம் இடத்திலும், ஈகிள்ஸ் கழக அணி 7 புள்ளிகளை பெற்று 8ம் இடத்திலும் உள்ளன.

மானிப்பாய் பரீஸ், ஸ்ரான்லி, ஸ்கந்தா ஸ்ரார் கழக அணிகள் தலா 6 புள்ளிகளை பெற்று 9ம் இடத்திலும், ஓல்ட்கோல்ஸ், யூனியன்ஸ் கழக அணிகள் தலா 5 புள்ளிகளை பெற்று 10ம் இடத்திலும் உள்ளன.

comment closed