Home » சிறப்புச் செய்திகள், செய்தி » முல்லை, திருகோணமலைக்கு நிருபமா ராவ் நேற்று விஜயம்

முல்லை, திருகோணமலைக்கு நிருபமா ராவ் நேற்று விஜயம்

இந்திய வெளியுறவுச்செயலாளர் நிருபமா ராவ் நேற்று முல்லைத்தீவு பிரதேசத்துக்கு சென்று திரும்பியுள்ளார். காலை 8.30 மணியளவில் அவர் முல்லைத்தீவுக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்தார்.

மீள்குடியமர்ந்தோரின் நிலைமை மற்றும் இந்திய உதவி நிவாரணங்கள் குறித்து இதன் போது ஆராயப்பட்டதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரி வித்துள்ளார். அத்துடன இந்திய நிவாரணப் பொருட்களும் இதன் போது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதன் பின்னர் திருகோணமலைக்கு சென்று அங்கு முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.இதன் போது வன்னியிலிருந்து கிழக்கிலும் இடம் பெயர்ந்து மீள்குடியமர்ந்துள்ள மக்களுக்கும் அத்துடன் கணவன்மாரை இழந்த பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு இந்தியா உதவ வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இவற்றை ஏற்றுக்கொண்ட நிருபமா ராவ் உடனடியாக இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

comment closed