Home » சிறப்புச் செய்திகள், செய்தி » இராணுவம் காணிகளை சுவீகரிக்கமுன் வன்னியில் மீள் குடியமர்வு அவசியம் – நிருபமா ராவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்

இராணுவம் காணிகளை சுவீகரிக்கமுன் வன்னியில் மீள் குடியமர்வு அவசியம் – நிருபமா ராவிடம் கூட்டமைப்பு வேண்டுகோள்

இடம் பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களை மீள்குடியமர்த்தாமல் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்கவுள்ளனர் அதற்கு முன்னர் வன்னியில் மீள்குடியமர்வு அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சர் நிருபமா ராவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய வெளி விவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவுக்குமிடையிலான சந்திப்பு நேற்றிரவு இந்திய இல்லத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், பொன்.செல்வராசா மற்றும் தி.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்புக் குறித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறியதாவது, இடம்பெயர்ந்து அகதிமுகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியமர்த்தாமல் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்கத் தயாராகவுள்ளனர். இதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இது தொடர்பாக எங்களின் அதிருப்தியை நிருபமா ராவிடம் தெரிவித்தோம். தற்போது அந்த மக்களுக்கு மீள்குடியேற்றமே அவசர தேவையாகவுள்ளது. இதனை மேற்கொள்வதற்கான அழுத்தத்தை அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்ததாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழும் மக்களை மீள்குடியமர்த் துமாறு இலங்கை அரசிடம் இந்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும் தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வைச் சந்தித்த போது இது தொடர்பில் தெரிவித்துள்ளதாக நிருபமா ராவ் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

comment closed