Home » செய்தி, முக்கிய செய்திகள் » இந்.வெளியுறவுச் செயலர் பார்வையிட்ட வசதியான தற்காலிக முகாம்கள்

இந்.வெளியுறவுச் செயலர் பார்வையிட்ட வசதியான தற்காலிக முகாம்கள்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் இலங்கை அரசாங்கத்தின் வழிகாட்டலின் கீழேயே செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியவெளியுறவுச் செயலாளர் வடக்குக் கிழக்கில் தமிழர்களின் பிரச்சினைகளையும் முகாம் மக்களின் பிரச்சினைகளையும் ஆராயவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன. இதன்போது நிருபமா ராவ் செல்லும் இடங்களுக் கெல்லாம் ஊடகவியலாளர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு செல்லும்போது ஊடகவியலாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதுமாத்திரமின்றி இந்திய வெளியுறவுச் செயலாளர் தலைமையிலான குழுவினர் மற்றும் அதிகாரிகள் தவிர பொது மக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மனிக்பாம் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டட நிருபமா ராவ் இலங்கைப்படையினரும் அதிகாரி களும் காண்பித்த ஒருசில் முகாம்களையே பார்வையிட்டுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் மெனிக்பாம் முகாமில் இருக்கின்ற முகாம்களில் வலயம் பூச்சியம் எனப்படும் கதிர்காமர் முகாமை மாத்திரமே பார்வையிட்டுள்ளார்.

இந்த முகாமானது இலங்கை அரசாங்கத்தினால் தகரம் மற்றும் கிடுகு என்பவற்றினால் இருப்பிடங்கள் அமைக்கப்பட்ட ஒரு முகாமாகும். இந்த முகாமிலேயே குறிப்பிட்டளவு வசதிகள் நிறைவு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தவிர ஆனந்த குமாரசுவாமி, இராமநாதன், அருணாச்சலம் மற்றும் வலயம் நான்கு என்ற நிலையங்களும் காணப்படுகின்றன.

இந்த நிலையங்களில் தகரத்தினால் அமைக்கப்பட்ட அரை குறை தங்குமிடங்கள் மற்றும் கூடாரங்களினால் அமைக்கப்பட்ட மிகவும் மோசமான நிலையிலான தங்குமிடங்கள் என்பன காணப்படுகின்றன. இந்த முகாம்களிலேயே மக்கள் தமது அடிப்படை வசதிகளை நிறைவு செய்துகொள்ள முடியாத அளவிற்கு சிரமத்தில் வாழ்கின்றனர். எனவே இவ்வாறான முகாம்களை காண்பிக் காமல் தமக்கு சார்பான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள கதிர்காமர் முகாமைக்காண்பித்ததன் மூலம் இலங்கை அரசாங்கம் முகாம் மக்களின் உண்மையான நிலைமையினை இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவிடம் மறைத்துள்ளதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் முகாம் மக்கள் தொடர்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் வெளியிடும் தகவல்கள் அவரின் கண்ணால் பார்க்கக்கூடியதாக இருந்த சகல வசதிகளையும் அரசாங்கம் ஏற்படுத்திவைத்துள்ள கதிர்காமர் நிலையத் தினை அடிப்படையாகக் கொண்டதே ஒளிய சகல முகாம்களின் நிலைமையினையும் பிரதிபலிப்பதென்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னரும் ஐக்கியநாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோது அவரும் இலங்கை அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்ட முகாம்களை மாத்திரம் பார்வையிட்டு இலங்கை அரசுக்கு ஆதரவான அறிக்கையை சமர்ப்பித்ததாக குறிப்பிட்ட ஜே.வி.பி. இதுபோன்ற இந்திய வெளியுறவுச் செயலாளார் நிருபமாராவின் விஜயமும் அமைந்துவிடக் கூடாது என்று கூறியிருந்தமையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

comment closed