Home » விளையாட்டு » கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் சாதனை படைக்கப்பட்டது.

கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் சாதனை படைக்கப்பட்டது.

வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்.மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு பிரதேச செயலகங்கள், உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கு இடையே நடத்திய 2010ஆம் ஆண்டுக்கான தடகளப் போட்டியில் கோலூன்றிப் பாய்தல் நிகழ்வில் சாதனை படைக்கப்பட்டது.
ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த ரி.மேகுநாத் 3.40 மீற்றர் பாய்ந் துள்ளார். இவர் 2002ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தைச் சேர்ந்த சி.ரஞ்சித்குமார் 3.40 மீற்றர் சாதனையைச் சமப்படுத்தியுள்ளார்.

comment closed