Home » செய்தி, பொருண்மியம், முக்கிய செய்திகள் » கெளதாரிமுனை மண்ணித் தலையில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை

கெளதாரிமுனை மண்ணித் தலையில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை

பூநகரி உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட கெளதாரி முனை மண்ணித்தலையில் இயற்கை அழகு கொண்ட பெரும் மண் கும்பிகளில் இருந்து மண் அகழ்ந்து எடுக்கப்பட்டு தினமும் பல கனரக வாகனங்களில் பரந்தன் ஊடாக யாழ்.குடாநாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது.

இதேவேளை தொடர்ந்தும் மண் ஏற்றும் செயற்பாட்டுக்கு உயர் பீடங்களில் அனுமதி பெற்றதாக மண் ஏற்றுபவர்கள் தெரிவித்ததாக கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.மேலும் அரசினால் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்ட மீள்குடியேறிய பூநகரி குடியிருப்பாளர்கள் இவ்விடத்தில் மண்ஏற்ற முடியாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

எனவே உல்லாசப் பயணிகள் இப்பகுதிக்கு வருகை தந்து இம் மண் கும்பிகளின் இயற்கை அழகை ரசிக்கின்ற வேளையில் இப்படியான செயற்பாட்டினால் அழகு கெடுவதாகச் சுட்டிக்காட்டிய மக்கள் இவ்வியற்கை அழகைப் பாதிக்காத வகையில் மண் ஏற்றுதலைத் தடை செய்ய அரச அதிகாரிகள் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கின்றனர்.

comment closed