Home » கல்வி, செய்தி » 160 மாணவருக்கு அரிக்கன் லாம்புகள் வழங்கப்பட்டன

160 மாணவருக்கு அரிக்கன் லாம்புகள் வழங்கப்பட்டன

கிளிநொச்சி தருமபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் ஜி.சீ.ஈ (சாதாரண) தரத்தைச் சேர்ந்த 160 மாணவர்களுக்கு ஒளிவிளக்குத் திட்டத்தின் கீழ் அரிக்கன் லாம்புகளைக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வழங்கியுள்ளார்.
வித்தியாலயத்தில் இடம் பெற்ற மெய்வன்மைப் போட்டிகளில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த உதவிகளை வழங்கினார்.
அத்துடன் வித்தியாலய பாண்ட்வாத்திய அணிக்கு நிதி உதவியையும் அவர் வழங்கினார்.
வித்தியாலய அதிபர் பூலோகராஜா தலைமையில் நடை பெற்ற இந்த நிகழ்வில் சிவஞானம் சிறிதரன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களை வழங்கியதுடன், மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக உதவிகளையும் வழங்கினார்.
குறிப்பாக எதிர்வரும் க.பொ.த.சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உதவும் நோக்குடன் தனது “”ஒளி விளக்கு” திட்டத்தின்கீழ் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 160 அரிக்கன் லாம்புகளை அவர் வழங்கினார்.

comment closed