Home » கல்வி, செய்தி » 15000 வடக்கு-கிழக்கு சிறுவர்களின் கல்வி மரத்தடியில் தொடர்கிறது

15000 வடக்கு-கிழக்கு சிறுவர்களின் கல்வி மரத்தடியில் தொடர்கிறது

வடக்கு கிழக்கில் பல பாடசாலைகள் இடைத்தங்கல் முகாங்களாக மாற்றப்பட்டுள்ளதால் 15000 ற்க்கும் மேற்பட்ட பாடசாலைச்சிறுவர்கள் மரத்தடியில் கல்விகற்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஞாயிறு லக்பிம நாளேடு தெரிவித்துள்ளது.

போர் முடிவடை:ந்து 14 மாதங்களாகியும் பல மில்லியன் டொலர்களை இராணுவ தள நிர்மானங்களுக்காக செலவு செய்யும் அரசு, ஆனால் கற்றல் செயற்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு-கிழக்கு மாகாணங்களில் எதுவித முன்னேற்றமும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.

இதே வேளையில் இலங்கை ஆசிரியர்ச் சேவை சங்கத்தின் செயளாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவிக்கையில் “போரால் கட்டிடங்கள் மட்டும் பாதிக்கப்பட வில்லை, பாரிய அளவிலான ஆசிரியர்களின் உயிரிழப்பாலும், பல ஆசிரியர்கள் நிர:ந்தரமாக வடக்கு-கிழக்கை விட்டு வெளியேறியுள்ளதாலும் அங்கு கற்றல் செயற்பாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்பட வில்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னைய காலங்களில் இக்காலப் பகுதியில் 2500இல் இரு:ந்து 3000 வரையிலான :நியமனங்கள் வழங்கப்படிரு:ந்தது. இம்முறை 3000 ஆசிரியர்கள் பயிற்சி முடித்து வேளியேறியிருக்கும் நிலையிலும் நியமனங்கள் வழங்கப்படாததற்கு நிதிப்பற்றாக்குறையே காரணம் காட்டப்படுகிறது.

2010 வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு இல்லாததால், அடுத்த வரவு செலவுத்திட்டம் வரை நிலமைகள் மாற்றம் அடையப்போவதில்லை என்றும் இம்முறை க.பொ.த சாதரண தரம் மற்றும் உயர்தரத்துக்கு தொற்றவுள்ள தமிழ் மாணவர்கள் பெரிதும் பதிக்கப்படுவர். எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

comment closed