“புலிகளைத் தோற்கடித்த பின்னர்தான் தமது தீர்வுத்திட்டத்தை அறிவிப்போம் எனக்கூறிக்கொண்டு, போரை நடாத்துகிறது சிங்களமும் சிறிலங்கா அரசாங்கமும் . வடக்கு கிழக்கை பூர்விகமாகொண்ட தமிழர்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்த பின்னர், சிங்களம் யாருக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது?”
“வடக்கு கிழக்கில் அரசியல் ரீதியிலும் ஆத்மீகரீதியிலும் நிகராகன தமிழரின் உண்மையான பிரதிநிதிகளையும் , அவர்களது பேரம் பேசும் சக்தியையும் அழித்துவிட்டு, எப்படிச் சிங்களமும் சிறிலங்கா அரசும் பேச்சுரிமை மறுக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கு தீர்வை முன்வைக்கப்போகிறது?”
“தமிழரின் வரலாற்றுச் சொத்தான தாயக நிலத்தையே ஏற்க மறுக்கும் சிங்களம், எப்படி வடக்கு கிழக்கை பூர்வீகமாக கொண்ட மக்களுக்கு ஒரு நீதியான தீர்வை முன்வைக்கப்போகிறது? என்றும்.சிங்கள தேசத்திலே கடந்த அறுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் இனிவரும் காலங்களில் நிகழ்ந்துவிடப் போவதுமில்லை, அப்படி நம்பி ஏமாறுவதற்கு எமது மக்களும் தயாராக இல்லை.”
“என்று தீர்க்க தரிதனத்துடன் தனது 2008ம் ஆண்டு மாவீரர் உரையில் தெளிவாக கேள்வி வடிவில் குறிப்பிட்டிருந்தார் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அவர் அந்த உரையின் இறுதியில் மிகத்தெளிவாக குறிப்பிட்டவை எமக்கு இன்று மிகவும் பொருந்தும்.”
“பூமிப்பந்திலே ஈழத்தமிழினம் ஒரு சிறிய தேசமாக இருக்கின்றபோதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்திமிக்க இனம். தன்னிகரற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட இப்படியான எமது அருமை பெருமைகளையெல்லாம் அழித்து, தமிழீழ தேசத்திலே தமிழரின் இறையாண்மையைத் தகர்த்துவிட்டு, இராணுவப் பலத்தாற் சிங்களம் தனது இறையாண்மையை திணித்துவிடத் துடிக்கிறது.
எத்தனை சவால்களுக்கு முகம்கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காகத் தொடர்ந்து போராடுவோம் [வேண்டும்].
வரலாறு விட்ட வழியில், காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம். இந்த வரலாற்றுச் சூழமைவில், தமிழர் உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாகக் குரலெழுப்பி….. சத்திய இலட்சியத் தீயில் தம்மையே அழித்துச் சரித்திரமாகிவிட்ட எமது மாவீரர்கள் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோமென உறுதியெடுத்துக்கொள்வோமாக..”
என்பதே உலகத்தமிழினத்துக்கு தமிழீழ மண்ணில் இருந்து திரு பிரபாகரன் அவர்கள் வரலாற்று முக்கித்துவமான மாவீரர்தின உரையில் குறிப்பிட்டார்.
ஆனால் இன்று ராணுவப் போராட்டம் பின்னடைவு அடைந்தது உண்மை தான் ஆனால் அரசியல் வழியில் மிகவும் பலமான நிலையில் நாம் நிற்கிறோம். ஆனால் நாம் குழம்பிப்போய் உள்ளோம்.
இன்று எம்முன் பல கேள்விகள் இருக்கின்றன -
- யார் சரி? யார் தவறு? -
- அரசியல் தீர்வா?
- அல்லது மனிதநேயப்பணிகளா? -
- விடுதலைப்புலிகள் இன்னமும் ஈழத்தில் ஆயுதங்களுடன் இருக்கிறார்களா?
- யார் தமிழர்களை வழி நடத்தக்கூடிய தலைமைத்துவ ஆழுமையைக் கொண்டுள்ளனர்?
- ஆயிரத்தெட்டு புலம் பெயர் அமைப்புக்கள் – இதில் யாரை நம்புவது?
- எந்த செய்தி ஊடகம் சரியான கருத்துக்களை சொல்கிறது?
- ஊடகங்கள் ஏன் மக்கள் நம்பிக்கையை பெறுவதில்லை?
- தேசியத்துக்காக சேர்க்கப்பட்ட நிதியில் மோசடியா?
- யார் இன்று எமது தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்?
- செயற்குழுவா?
- மக்களவையா?
- நாடுகடந்த அரசா?
- அல்லது ஒவ்வோரு நாடுகளிலும் இருக்கும் தமிழ் அமைப்புக்களா?
என பல கேழ்விகள் எம்மத்தியில் எழுகின்றன இதேவேளையில் ஒரு நிழல் அரசு நடாத்தி வந்த பாரிய பலம் கொண்ட விடுத்லைப்புலிகள் எப்படி இவ்வாறு தோற்றுப்போணார்கள்?
- தமிழீழம் சாத்தியமா?
- இல்லை கிடைப்பதை எடுத்துக்கொண்டு எமது வேலைகளைப்பார்பதா?
- உண்ண உணவின்றி இருக்கும் மக்களுக்கு உணவா அல்லது விடுதலையா?
என்ற பற்பல கேள்விகள் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் எழுப்பப்படுகின்றன. இதற்க்கு காரணம் ஈழத்தமிழர்களே தான். போராட்டம் என்பது குதிரைப்பந்தையம் அல்ல பணத்தைக்கட்டிவிட்டு எந்தக்குதிரை வெல்லும் என்று பார்த்துக்கொண்டிருக்க. எம்மவர் ஒவ்வொருவருக்கும் தேசியக் கடமையிருக்கிறது. ஒவ்வொருவரும் பங்காளர்களாக வேண்டும். அரசியல் சூட்சுமங்களை அறிய வேண்டும் வெறுமனே அரசியல் ஆய்வாளர்களை நம்பியிருக்காது, வேறுமனே ஊடகங்களை நம்பியிராது உண்மையைக்கண்டறிய வேண்டும். தர்க்கரீதியான வாதங்களையும் பிரதிவாதங்களையும் சீர்தூக்கி பார்த்து ஆராய வேண்டும். கண்ணால் காண்பதும் பொய், வாயால் கேட்பதும் பொய், தீரவிசாரித்து அறிவதே உண்மையாகும்.
தமிழர் தாயகத்தில் தாயகத்திற்காக தங்கள் இன்னுயிர்களை அர்பணித்த மாவீரர்களின் தூய்மையான் அர்ப்பணிப்பையும் அவர்களது தியாகத்தையும் ஒரு கணம் மீட்டிப்பார்ப்போம். தம் உயிரை ஆகுதி ஆக்கி எமது இனத்திற்காகவும், மண்ணிற்காகவும் தமது வாழ்கையை அர்ப்பணித்த தியாகச்செம்மல்கள். இவர்களது குருதி தோய்ந்த நிலத்திலும், அவர்கள் கல்லறை மேலும் கட்டி எழுப்பப்பட்டதே எமது விடுதலைப்போராட்டம். இன்று சரியான ஒரு வழிகாட்டி இன்றி தத்தளிகின்றது விடுதலைப்பயணம்.
புலம் பெயர் காகிதத்தலைவர்களே இனியும் உங்களுக்கு புத்திவரவில்லையானால் நீங்களே எமது போராட்ட தோல்விக்கு காரணமானவர்களாக வரலற்றில பதிக்கப்படும். ஈழத்தமிழருக்காக எந்தச்செயற்திட்டமாக இருந்தாலும் அது புலம் பெயர் மக்களால் தான் முன்னெடுக்க முடியும். அதேவேளை புலம் பெயர் மக்களை விடுதலைப்போராட்டத்தின் காவலர்கள் ஆவார்.
இதை நன்கு இலங்கை அரசும் உலக நாடுகளும் புரிந்து வைத்திருக்கின்றன, ஆனால் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மட்டும் தமது சக்த்தியை குறைவாக எடைபோட்டு சிங்களத்தின் கால்களில் விழுந்து கிடந்து கத்துகின்றோம். சிங்களத்தின் காலில் எமது மக்கள் உள்ளனர், என்வே சிங்கள்வனின் காலைப்பிடித்து கெஞ்சுவோம் என்று சிலர் கூறிக்கொண்டு தமது செயற்படுகின்றனர்.
உண்மை தான் இதற்காகத்தான் 2008ம் ஆண்டு மாவீரர் உரையினை முன்னர் குறிப்பிட்டிரு ந்தேன். இவர்கள் சரியாபிழையா நாங்கூறமாட்டேன், ஆனால் எமது பலத்தால் சாதிக்க முடியாத்தை எமது பணிவால் இவர்களால் சாதிக்கமுடிந்தால் நிச்சயம் யாவரும் வரவேற்பர். ஆனால் இவர்கள் மற்றையவர்களை குறை கூறிக்கொண்டிருக்கிரார்களே தவிர ஆக்க பூர்வமாக எதையிம் செததாக தெரியவில்லை.
ஆனால் இந்த இடத்திலே ஒரு முக்கிய சம்பவத்தை நான் குறிப்பிடவிடும்புகிறேன்: முல்லிவாக்கால் அவலத்தின் உச்சத்தில் பிரித்தானிய தலை நகரில் பல மக்கள் பேரணிகள் நடந்தன அவற்றில் ஒன்று “ஹய்ட் பர்க்” பூங்காவில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது. புலத்து காகிதத்தலைவர்களில் ஒருவர் நிண்ட இடத்தின் மேல் தமிழீழ தேசியக்கொடி பறந்து கொண்டிருந்தது.
அவர் பக்கத்தில் இருந்தவரிம் கூறினார், “இந்தகொடிக்கு கீழ்நிற்க தனக்கு அந்தரமாக இருக்கிறது என்னதான் இரு ந்தாலும் நிற்கவேண்டிதாகிவிட்டது.” என்று. ஆனால் அவர் கொடியிருந்த இடத்தில் இருந்து நகர்ந்து செல்லவில்லை ஏனென்றால் தன்னை இந்தப்போராட்டத்தின் முன்வரிசையில் காட்டவேண்டிய தேவை அவருக்கிருந்தது.
ஆயிரம் ஆயிரம் போராளிகளும் பொதுமக்களும் உயிர்தியாகம் செயது பாதுகாத்த எமது தேசியக் கொடியைக்கூடப்பிடிக்காத இவரைபோல சிலர் தான் இன்று அரசுடன் இணை ந்து செயற்படவேண்டும் என்று அரசியல் பாடம் எடுக்கின்றனர்.இவர்களை எப்படி எமது மக்களுக்காகத்தான் பேசுகிறார் என்று நம்புவது?
இவர்கள் கருத்துக்கள் சில சரியானவையாக இருந்தாலும் அவை உண்மை நோக்கம் கொண்டவையா என்ற சந்தேகம் எழுகின்றது.
உண்மையில் போர்முடிந்தமறு நாளே பல மனித நேயப்பணிகளை பலர் ஆரம்பித்திருந்தனர், இதிலும் சில உண்மையில் எம்மக்களுக்கு உதவுவதற்க்காகவும் போரால் தாய் தந்தையை இழந்த எமது குழந்தைகளை காப்பதற்க்காகவும் பசில் ராஜபக்ச வரை சென்று மக்களுக்கு உதவியவர்களும் எம்மத்தியில் இருக்கிறார்கள்.
இன்றும் முகம் தெரியாத பலர் எம்மத்தியில் ஒழுங்கமைக்கப்பட்ட மனித நேயப்பணிகளை செயது வருகின்றனர். இவர்கள் எமது மக்கள் இவர்களைப் பாதுகாப்பது எமது கடமையாக செய்து வருகின்றனர். அவர்களால் செய்யமுடி ந்ததில் பத்தில் ஒரு பகுதியைக்கூட செய்ய முடியாத இவர்கள் அடிக்கடி ஊடகங்களுக்கு அறிக்கை கொடுத்துக்கொண்டிருப்பதே தொழிழாக்கியுள்ளனர்.
உண்மையில் புலம் பெயர் நாடுகளில் உள்ள பல அமைப்புகள் தமது இருப்பை உறுதிசெய்வதற்க்காகவே இவ்வாறு மனித் நேயம் பேசுகின்றன.
உண்மையில் கோடிக்கணக்கான பணத்தை இன் நிறுனங்கள் புலம் பெயர் மக்ககிடம் இருந்து சேர்க்கிறார்கள், இவர்கள் எல்லோரும் தனித்தனி அமைப்புக்களை நடத்தாது ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காகவும், எமது தேசியப்பிரச்சினைக்காகவும் செயற்படுவார்களாயின். எமது பலத்துக்கு சிங்கள தேசம் அடிபணிந்தேயாகவேண்டும்.
பணபலம், மூளைவளம் மற்று சர்வதேசத்தொடர்புகள் என்று பல சாதமான காரணிகள் இருந்தும். எமது ஒற்றுமையின்மையால் பலவீனமாகவுள்ளோம்.
ஒவொரு, ஊர்சங்கங்கள் முதல் பல மனிதநேயமைப்க்களும், ஒவ்வொரு நாட்டிலும் பல அரசியல் அமைப்புக்களும், உலகலாவிரீதிலும் பல அமைப்புக்கள், பின் அயிரத்து எட்டுமுறை தேருதல்களும் வக்கெடுப்புகளும் என்று பிரிந்து நிற்கின்றோம்.
ஆயிரத்தெட்டு ஊடகங்கள், ஆனால் ஆனதாக ஒரு வாணொலியோ தொலைக்காட்சிச்சேவையோ எமக்கில்லை. காரணம் ஒவ்வோருவரும் தனது நலனுக்காகவும் தனது கருத்தாக்கத்திற்காகவே ஊடகங்களை நடாத்துகிறார்களே தவிர தேசியத்துக்காக புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மையுடன் ஒரே இலக்குக்காக இணைந்து செயற்படுவது மற்றும் கழ்ப்புணர்வுகளைக்களைந்து, சுயலாபங்களை கைவிடுதல் போன்ற இந்த சிறு தியாகங்களைக் கூட எமது மக்களுக்காக செய்யாத இவர்களால் எப்படி எமது இனத்தை வழிநடத்த முடியுபம்?
தமது அதிகாரத்தின் மூலம் மக்களைக்கட்டுப்படுத்தலாம் என்று சிலர் பகல் கனவு காண்கின்றனர், திரு பிரபாகரன் அவர்கள் தமது கொள்கைகளாலும், உறுதியான முடிவிகளாலும், தேசியத்தின் மேல் அவர்கொண்ட அளவுகடந்த தியாகமுமே மக்களை அவர்கள் பக்கம் திருபியதே தவிர அதிகாரமோ, அடக்குமுறையான் செயற்பாடோ அல்ல என் பதை யாவரும் புரி ந்து கொள்ளவண்டும்.
புலம் பெயர் தேசங்களில் உள்ள அமைப்புகள் யாவும் இணைந்து செயற்பட்டால் ப்ல மில்லியன் டொலர்கள் வரையில் ஆண்டுடொன்றிக்கு அரசியல் தேவைகளுக்கான சேர்த்து மிகத்துல்லியமாகவும், திறம்படவும் செயற்படமுடியும். இதன் மூலம் எமது மக்களுக்கும் தேசத்துக்கும் நன்மை பயக்கும் பல விடையங்களை செய்யமுடியும்.
தொடர்ச்சியான செயற்பாடுகளுடன், ஒரு வெளிநாட்டு உயர்தானிகத்தைப்போல திறம்பட செயற்பட்டு பாரிய பலமாகவும் அரசியல், பொருளாதார சக்தியாச்செயற்படுவது மட்டும் அன்றி எமது மக்களி அவலத்தை வெளியே தெரியப்படுத்தி உலக நாடுகளின் உதவியைப்பெற்றுத்தரலாம். பல அமைப்புக்கள் தனித்தனியாக செயற் படுவதும் எல்லாம் பகுதி நேர செயற்பாட்டாளர்களாக உள்ளதாலும், வேலைத்திட்டங்கள் தொடர்ச்சியீனங்களும், தொடர்பாடலிகளி உள்ள இடைவேளிகளாலும் வேளிநாட்டு இராஜ த ந்திர உறவுகளை தொடர்சியாக பேணமுடியாததாலும் எமது அரசியல் நகர்வுகள் செயற்திறனற்றதாக இருக்கின்றன.
இராணுவ வழிமுறை விடுதலைப்போராட்டத்தை உலகம் எதிர்த்ததே தவிர எமது விடுதலப்போராட்டம், Scotland போலவும், கனடாவின் கியுபெக் மானிலம் காட்டிலும் வரலாற்று பூர்வீக நியாயங்களும் அடிப்படைகளும் கொண்டது. ஆகவே விடுதலை என்பது எமது கையில் தான் தங்கியுள்ளது.
மக்களாகிய நாம் செய்ய வேண்டியது இந்த அமைப்புக்களை ஒற்றுமையாக செயற்பட வைக்க வேண்டும். தனித்தனி செயற்பாடுகளை ஆதரிக்ககூடாது. கொடுக்கும் முழு அழுத்தங்கள் மூலம் அவர்களிற்கிடையே உள்ள வேறு பாடுகளைக்களைந்து. தேசிய விடுதலைக்காக ஒன்ராக செயற்பட வைக்கவேண்டியதேயாகும்.
வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறும் தன்மை போன்ற அடிப்படை ஜநாயக விளிமியங்களை மதிக்காது, வேறுமனே வாக்கெடுப்பு தான் ஜ நாயகம் என்று எண்ணி செயற் பட அனுமதிக்கக்கூடாது. அதேவேளையில் விடுதலை பற்றிய தெளிவான அறிவையுப், உலகாரசியல் ஓட்டங்க்களையும் கற்க வேண்டும்.


