பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்ட தாகச் சொல்லப்படுகின்ற போதிலும் எமது மக்கள் மீதான அடக்குமுறை இன்னமும் கைவிடப்படவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் சூரிச் சிவன்கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் “மண்சுமந்த மேனியர்” எனும் தொனிப்பொருளிலான போரில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அன்புக்கரம் கொடுக்கும் அங்குரார்ப்பண நிகழ்ச்சி யாழ். வடமராட்சி திக்கம் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்ற வகையில் எமது நிலத்தின் மீதான போர் முன்னெடுக்கப் பட்டது. போரில் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சொல்லப்படு கிறது. அவ்வாறாயின் இன்னமும் ஏன் எமது மக்கள் மீதான அடக்குமுறை தொடர வேண்டும்?
எமது மக்கள் தமது சொந்த நிலத்தில் வாழ முடியாத நிலையில் இன்னமும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்னர். அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாத அவல நிலை இன்னமும் தொடர்கின்றது.தற்போதைய அரசு எமது மக்களுககான அபிவிருத்தி நடவடிக்கை எதனையும் முன் னெடுக்கத் தயாராக இல்லை.ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான சந்திப்பின்போது போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத் துக் கொடுக்கவேண்டும் என்று எங்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதன்போது ஒரு வீடு கூடக் கட்டிக் கொடுப்பதற்கு அரசிடம் பணம் இல்லை என்று எம்மிடம் நேரடியாகவே தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பு இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தது. இதனை அடுத்து இந்தியாவிற் கான பயணத்தினை மேற்கொண்டிருந்த மகிந்த ராஜபக்வுடனான சந்திப்பின்போது இந்த விடயத்தினை கலந்துரையாடிய இந் திய உயர்மட்டம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென ஐம்பதாயிரம் வீடுகளைத் தாமே கட்டிக்கொடுக்க முன்வந்தது.
எனவே எமது மக்களுக்கான உதவிகளை அரசு வழங்கும் என நம்பியிருக்கமுடியாது. எமது மக்கள் ஒவ்வொருவரும் தத்தமது வாழ்க் கைக்கான தொழில் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். நாம் எமது சொந்தக் காலில் நின்று எமக்கான பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.


comment closed