Home » செய்தி » பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் புலிகளுக்குத் தொடர்பில்லை – கடற்படையினர் தெரிவிப்பு

பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் புலிகளுக்குத் தொடர்பில்லை – கடற்படையினர் தெரிவிப்பு

இலங்கையில் இடம்பெற்று வந்த பாரிய சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை கடற்படை புலனாய்வுப்பிரிவினர் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் மாரவில பிரதேசத்தில் சட்ட விரோதமான நிலையில் நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட 5 பேரை கைது செய்யதன் மூலம் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.நீண்டகாலமாக இந்த சட்டவிரோத ஆட் கடத்தல் வர்த்தகம் இடம் பெற்று வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் அவுஸ்தி ரேலியாவுக்குச் செல்லும் நோக்கில் மாரவில ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவுஸ்திரேலியா மற்றும் ஏனைய நாடு களுக்குச் செல்வதற்கான நபர் ஒருவரிடம் தலா 12 இலட்சம் ரூபாய் அறவீடு செய்யப்படுவதாக விசாரணைகளின் மூலம் தெரியவந் துள்ளது.

குறித்த நபர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பில்லை என கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல செனரத் தெரிவித் துள்ளார்.

comment closed