Home » செய்தி » சன்னார் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

சன்னார் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சன்னார் கிராம மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரச தரப்பில் இருந்து இதுவரை சரியான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என சன்னார் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஆர்.திவ்யன் தெரிவித்தார்.

தங்களின் கிராமத்தில் 125 குடும்பங்கள் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி தரப்பால் கொட்டிலில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படைத் தேவைகளான பிரச்சினைகளான குடிநீர், வீடு, மலசலகூடம் மற்றும் உள்ளக வீதி ஆகிய வசதிகள் செய்து தரப்படவில்லை.

இம்மக்கள் தொழில் செய்யும் மருத மடு, சன்னார் குளம் என்பன தற்போது பல கிராம மக்களின் தொழில் நிலையமாக மாறிவிட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

“எமது துயரத்தைத் தீர்க்க எந்த அதிகாரியும் முன்வராமை எங்களுக்கு பெரும் துயரத்தைத் தருகின்றது” என அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

comment closed