இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் இடம் பெற்ற சம்பவங்களின் போது ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு ஆலோசனைவழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள்குழு செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கூடி ஆராயவுள்ளது.
இந்த நிபுணர்குழு நியூயோர்க்கில் கூடவுள்ளதாகவும் அமர்வுகள் நடைபெறவுள்ள இறுதித் திகதி இன்னமும் தீர்மானிக்கப்பட வில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.கடந்த யூலைமாதம் 19ஆம் திகதி முதல் தடவையாக இந்த நிபுணர்கள் குழு இலங்கை விவகாரம் குறித்த அமர்வுகளை நடத்தியிருந்தது.
நான்கு மாதங்களுக்குள் இந்தக் குழுவின் அறிக்கை ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதேவேளை நியூயோர்க்கில் நடைபெற வுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட இராஜ தந்திரிகள் கலந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


comment closed