Home » ஆய்வு, முக்கிய செய்திகள் » இராஜதந்திரமும் மக்கள் போராட்டமும்.

இராஜதந்திரமும் மக்கள் போராட்டமும்.

இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர் அவர்களின்   விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி அதனூடாக தமிழீழ நாட்டை நிறுவுவதற்க்கு என்ன செய்ய வேண்டும். என்ற கேள்வி  பலர் இடையே இருந்த போதும் காத்திரமான திட்டங்களை முன்வைப்பதும் அதற்கான செயற்திட்டங்களை நன்றாக திட்டமிட்டு செயற்படுத்தும் மிகவும் அவசியமாகும். இதன் அடிப்படையிலேயே இந்தக்கட்டுரைத்தொகுப்பு இடம்பெறுகின்றது. இது தனிப்பட்ட ஒரு சிறிய குழுவின் கருத்தாக இருந்தாலும் சிறிது நேரத்தை ஒதுக்கி வாசித்து, சிந்தித்து உங்கள் கருத்தையும் எமக்கு எழுதி அனுப்புங்கள்.

தமிழரின் விடுதலைப் போராட்டம் மிக மிக முக்கியமான காலகட்டத்தில் வந்து நிக்கின்றது. இன்றையநிலையில்  தமிழர்களின்  போராட்டத்தினை  தாயகத்தில் இருந்து  உரிமைக்காக போராடிய  இவர்களது  விடுதலைப்  போராட்டம்  தற்போது  புலத்தில் உள்ள   தமிழ்  மக்களிடம்  நகர்த்தப்பட்டு  உள்ளது.

புலத்திற்கு நகர்த்தப்பட்ட இந்த ஈழவிடுதலைப் போராரட்டத்தினை    புலத்தில் உள்ள அனைத்து மக்களும் ஈழவிடுதலைப் போராட்டம்  விடுதலை போரவேண்டும் என்பதில் மிகவும் தெளிவாக உள்ளனர். இதனை எவ்வாறு நகர்த்தப்பட வேண்டும் என்பதை எமக்குத் தெரிந்தளவில் ஜந்து பகுதிகளாக வகைப்படுத்தியதுடன் அவைகள் யாவும் சம காலங்களில் நகர்த்தப்படவேண்டும். இதற்கு  புலத்தில் உள்ள முழு மக்களும் முதலில் தங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மையை விடுத்து,  தமிழீழ விடுதலைக்காக பலவிட்டுக்கொடுப்புக்களை  நிகழ்த்தி, எல்லோரும் ஒரு திடமான கட்டுக்கோப்புக்குள் இருந்து, பலமான பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து ஆத்துமரீதியில்  செயற்படுவோம்  என  உருதிகொள்ளவேண்டும்.

இது ஐந்து பகுதிகளாக விரிகிறது:

1) இன்றைய உலக ஒழுங்கும், தமிழர் போராட்ட யதார்த்தமும்.

2) இன அடையாளங்களை பேணுதல் / அடுத்த சந்ததிக்கு கையளித்தல்

3) இனத்தின் சமூகப்பொருளாதார வலிமையை உயர்த்துதல்

4) மக்கள் போராட்டமும் அதன் தொடர்ச்சியான எழுச்சியும்

5) இராஜ தந்திரமும், இராஜிய உறவுகளும்

5) இராஜ தந்திரமும், இராஜிய உறவுகளும்

புலம் பெயர் நாடுகளில் வருத்ததுடன் அறிந்து கொள்ளும் யதார்த்தம் யாதெனில் இராஜதந்திரச்செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் இராஜதந்திரம் பற்றிய ஆழ்ந்த அறிவு எமது கல்விமாங்களின் மத்தியில் மிகவும் அரிதாகவே காணப்படுகிறது. இது அவர்கள் தவறு அல்ல, எமது சமுதாயமானது விஞ்ஞான கல்வியையும் அது சார்ந்த தொழிகளிலேயே அதிகம் நாட்டம் உள்ளது . அரசியல் சார்ந்த கல்வி கொள்கைவகுப்புச்சார்ந்த அறிவுகள் உள்ள அறிவுஜீவிகள் முழுமையாக செயற்பட்டு எமது குறிக்கோளுக்கான நியாயத் தன்மையை  புரியவைத்து எமக்கு சாதகமான பெறுபேறுகளை

பெறுவதற்க்கான செயற்பாடே இராஜதந்திர பரப்புரை. (ஆங்கிலத்தில் “Lobby”என்று அழைக்கப்படுகிறது).

முதலில் இச்செயற்பாடுபற்றிய சரியான விளக்கம் தெரிந்திருத்தல் அவசியம்.

  • எமது குறிக்கோள் (கள்) என்ன? வெறுமனே இறுதிக்குறிகோளை மட்டும் சொல்லாது, ஒவ் ஒருகட்டமாகவும் இறுதி குறிக்கோளை அடைவதற்கான வழிகளில் வரும் மயிற்கற்களையும் குறுகிய காலக்குறிக்கோள்களாக கொள்ளவேண்டும்
  • எமது குறிக்கோள்களை எமக்கு சாதகமாக மாற்றுவதற்க்கான அதிகாரம் யாரிடம் இருக்கிறது? என்பதை ஆராய்ந்து தெரிந்து கொள்ளல் வேண்டும்.
  • கொள்கைவகுப்பாளர்களிடையே கொண்டு செல்வதற்குமுன், கொள்கைவகுப்பாளர்களை 5 வகைகளாகப்பிரிக்கலாம்

1) முன்னொடிகள் – இவர்கள் எமது குறிக்கோள் பற்றி தெளிவும், அதைசெயற்படுத்துவதற்காக முழு மூச்சாக உதிரி உதிரியாக உழைக்கும் அல்லது உழைக்கக்கூடியவர்களை ஒருமுகப்படுத்தி   இவர்களமூலம்

அ) தமது நண்பர்களுக்கு எமது குறிக்கோள்கள் பற்றி தெளிவு  படுத்துவதன்  மூலம்  அவர்களின் ஆதரவைப்பெறுதல்

ஆ) உள்ளக பிரச்சாரத்துக்கான தந்திரோபாயங்களை வகுத்தல்

இ) வெளிப்படை குரல்தரவல்லவராக செயற்படக்கூடியவர்களை இனங்கண்டு அவர்களுக்கூடாக   ,  துல்லியமான ஆய்வு அறிக்கைகள்,  தகவல்கள், முக்கியமாக எமது குறிக்கோளுக்கான மக்கள் ஆதரவை திரட்டவேண்டும்

2) நண்பர்கள் – இவர்கள் எம்முடன் தனிப்பட்ட உறவு, மற்றும் கட்சி, சமூக, அல்லது பொருளாதார செயற்பாடுகளில் எம்முடன் நண்பர்களாக உள்ளவர்கள், ஆதனால் எமக்கு சார்பாக மாறக் கூடியவர்கள்.

சமூக நிகழ்வுகளுக்கு அழைத்தல், எமது குறிக்கோளுக்குள் மக்கள் ஆதரவைக் காட்டுவதன் மூலம் குறிக்கோள் பற்றி உரையாடல்களைத் தொடரல், முன்னோடிகளை அறிமுகப்படுத்தல் போன்ற செயற்பாடுகளால் மேலும் செயற்படவைக்கமுடியும்.

3) மதில் மேல் இருப்பவர்கள் இவர்கள் எமது குறிக்கோள் பற்றி எதுவித சார்பு நிலையும் அற்றவர்கள். ஆதரவாகவோ எதிராகவோ மாறக்கூடியவர்கள் என்பதால்தான் மதில் மேல் இருப்பவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இவர்கள் மிகமுக்கியமானவர்கள், வெளிநாட்டு கொள்கை சார்ந்த விடையங்களில் இவர்களை போன்றவர்களின் தொகை அதிகமாகக் இருக்கும். இவர்களை எம்பக்கம் வெல்லுவதற்கான உபாயத்தில் உள்ளக மற்றும் வெளியக அழுத்தங்களை சரியான அளவில் பிரயோகிக்கவேண்டும்.

4) மென்-எதிர்க்கோள்கை கொண்டவர்கள் இவர்கள் எமது குறிக்கொளுக்கு எதிரான கொள்கையுடையவர்கள் என்றாலும் செயற்பாடு குறைந்தவர்கள் அல்லது உறங்குநிலையில் இருப்பவர்கள். இவர்களை எதிர்க்கோள்கை செயற்பாட்டாளர்களாக மறவிடாது வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். சரியான அளவு பிரசாரத்தை மட்டும் இவர்களுக்கு செய்ய வேண்டும்.  மிகமுக்கியமாக தொடர்ச்சியான அழுத்தத்தால், இவர்களைக் கோவப் படுத்தக்கூடாது

5) தீவிர எதிர் கொள்கை உடையவர்கள். இறுதியாக இவர்கள் தான் எமது எதிர் தரப்பின் குறிக்கோள்களிக்காக செயற்படுபவர்கள். முக்கியமாக இவர்களை தனிமைப்படுத்தவேண்டும், இவர்களது தீவிரக்கொள்கை களைகள்,  இவர்களுடன் சார்ந்து நிற்பவர்களையும் அவர்களின் தவறுகளை மேற்கோள்காட்டி இவர்களை தனிமைப்படுத்தவேண்டும். இதை சரியான முறையிலான சொல்லாடல்களைக் கையாள்வதன் மூலமும் தொடர்ச்சியான வெளியாக செயற்பாடுகள் மூலமும் தனிமைப்படுத்தி மற்றவர்கள் இவர்கள் பக்கம் சேராது பார்த்துக்கொள்ளவேண்டும்.

“உள்ளக” மற்றும் “வெளியக”என்ற சொல்லாடல்களுக்கான விளக்கம்.

சிறந்த சக்திவாய்ந்த இராஜதந்திரத்துற்கும், இராஜதந்திர குறிக்கோள்களை வெல்வதற்கும். இரண்டும் மிக அவசியம். இரண்டும் ஒன்றுக்கொன்று இணைந்து பங்களிப்புடன் செயற்படவேண்டும்.

உள்ளக

இதுவே பாராளுமன்றுக்கு உள்ளேயும், கொள்கைவகுப்பாளர்களிடையேயும் செய்யும் செயற்பாடு.

  • சட்டவாக்கர்கள், கொள்கைவகுப்பாள்ர்களுடனான சந்திப்பு
  • எமது கொள்கைகளுக்கு வலுச்சேர்க்கும் தரவுகளை கொடுத்தல்,
  • கொள்கையாளர் குழுக்களின் முன் சாட்சியம் அழித்தல்
  • கொள்கைவகுப்பாளர்களுடனான பேச்சுவார்த்தைகள்.
  • எம்மைப்போன்ற மற்றைய இராஜதந்திர பிரச்சாரக்குழுக்களுடன் சந்திப்புக்கள்

போன்றவையைக்குறிப்பிடலாம்., இச்செயற்பாடுகளைச்செய்பவர்கள் அதிகாரமையங்களுடன் செயற்படுபவர்கள்.

“வெளியக”

  • அரசியல் சமூக அடித்தளச்செயற்பாடுகளான பேரணிகள், போராட்டங்கள் (Grassroot activities) நிகழ்த்துதல்
  • ஊடகங்களுடனான உறவுகளை வளத்தல், மக்கள் மூலம் செய்யும் வித்தைகள் மூலம் ஊடகங்களை ஈர்க்கவேண்டும்.
  • ஆரசியல் தொகுதிகளிலான பிரச்சாரங்கள் – தொகுதி உறுப்பினர்களை எம்பக்கம் ஈர்ப்பதற்க்கான செயற்பாடுகள்.
  • பரந்த, விரிவான நட்பு அணிகளை உருவாக்குதல் (Solidarity)
  • கடிதங்கள் எழுதுதல், மனுக்களை பலர் கைஒப்பத்துடன் அனுப்புதல் போன்ற செயற்பாடுகள்.

உள்ளக செயற்பாட்டில் வெற்றி பெறுவதானால் வெளியக செயற்பாடு மிக அவசியம். வெளியக செயற்பாடு இன்றி உள்ளக செயற்பாடு பலனற்றது.

முக்கியமாக இவ்விரு வகைச்செயற்பாடுகளையும் இணைத்து சரியான திட்டமிடலுடன்,  தூரநோக்கபார்வையுடன், நெறிபடுத்தவேண்டும். அதேபோல சரியான நேரத்தில சரியான செய் தியைக்கொடுப்பது அவசியம்.

Leave a comment