Home » கல்வி » தமிழ் மொழி பொறியியல் படிக்க ஆர்வம்

தமிழ் மொழி பொறியியல் படிக்க ஆர்வம்

தமிழ் வழி மூலம் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகள் தமிழ் வழியில் கற்பிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் 1380 இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் 1270 இடங்கள் நிரம்பியுள்ளதாக அண்ணா பல்கலைக் கழகத் துணைவேந்தர் மன்னர் ஜவஹர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இந்த மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்க தனி குழு அமைக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் ஏற்கனவே முதல் இரண்டு செமஸ்டர்களுக்குத் தேவையான புத்தகங்களை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் ஆங்கிலப் புலமையை மேம்படுத்தும் நோக்கில் மூன்று ஆண்டுகள் வரை அவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும். அதே போல அனைத்து பொறியியல் சார் வார்த்தைகளும் தமிழில் மொழி பெயர்க்கப்படாது – தேவைப்படும் இடங்களில் நன்கு பரிச்சையமான ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தப்படும் என்றும் துணைவேந்தர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

தமிழில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசின் வேலை வாய்ப்பில் முன்னிரிமை அளிக்கப்படும் என உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்குப் பிறகு தமிழக அரசு அறிவித்திருந்தது.

நன்றி: பி.பி.சி தமிழ் சேவை

comment closed