கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் ஆரம்பக் கல்வி மன்றம் நடாத்திய கலைத்திறன் விழா 11.08.2010 காலை 9 மணிக்கு கலாசாலையில் உள்ள ரதிலட்சுமி மண்டபத்தில் இடம்பெற்றது.
பயிற்சி ஆசிரியர் எம்.எஸ். அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் பிரதம விருந்தினராகவும் வவுனியா கல்வியியற் கல்லூரிப் பீடாதிபதி கே.பேர்னாட் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
கலாசாலை முதல்வர் நீர்வை வே.கா.கணபதிப்பிள்ளை ஆசியுரை வழங்கினார். பிரதி அதிபர் கலாநிதி செ.திருநாவுக்கரசு, ஆரம்பக்கல்வி மன்றக் காப்பாளர் விக்னேஸ்வரி கந்தசாமி ஐயர் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். பயிற்சி ஆசிரியர்கள் வழங்கிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
comment closed