Home » முக்கிய செய்திகள் » ‘எச்.வி.சன் சீ’ 500 தமிழ் அகதிகலுடன் கனேடிய கட்டுப்பாட்டுக்குள்

‘எச்.வி.சன் சீ’ 500 தமிழ் அகதிகலுடன் கனேடிய கட்டுப்பாட்டுக்குள்

இலங்கை அகதிகள் 500 பேருடன் கனடாவை அடைந்துள்ள ‘எச். வி. சன் சீ ‘ கப்பலுக்குள் அந்நாட்டுக் கரையோர காவல் படையினர் கட்டுப்பாட்டில வந்துள்ளதாகத் அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கப்பலில் பெண்களும் குழந்தைகளும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், கப்பலில் உள்ள ஒருவர் மாத்திரம் சுகவீனமுற்றுள்ளதாகவும் முன்னர் வெளியான தகவலை போன்று எவரும் மரணமாகவில்லை என்றும் கனேடிய எல்லைப்பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது.

இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.  இந்தநிலையில் ஆர்வமுள்ள உறவுகள் கனடியத் தமிழர் பேரவையுடன் 416 240 0078 உடன் தொடர்பு கொண்டு மனித நேயப் பணிகளில் ஈடுபடலாம் என தமிழர் பேரவை அறிவித்துள்ளது.  கப்பலில் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவென விக்டோரியாவில் வைத்தியசாலை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கப்பலில் வருபவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க வேண்டாம் என இலங்கையின் உயர்ஸ்தானிகர் கனேடிய அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

comment closed