இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
அவரது 800ஆவது விக்கட்டாக இந்திய வீரர் பி.பி.ஓஜா ஆட்டம் இழந்தார். இது முரளிதரன் விளையாடிய 133 ஆவது டெஸ்ட் போட்டியாகும். இந்தப்போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் எட்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.
முத்தையா முரளிதரன் இன்றைய டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து விடைபெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன் றி பி.பி.சி : இக்காணொளி பி.பி.சி இணையத்தளத்தில் இருந்து ஒளிபரப்பப்டுகிறது.
comment closed