இலங்கையின் வரலாற்றில் முதன் முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் 1700 கோடி ரூபாய் நிதியிலிருந்து சேதனப்பசளை தயாரிக்கும் நிலையம் அம்பாறையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கு 14 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்திலிருந்து நாளொன்றிற்கு 12 தொன் சேதனப்பசளையை உற்பத்தி செய்ய முடியுமென மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கர தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான தூதுவர் பேனாட் சவேஸ் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் உட்பட பலர் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

