Home » ஆய்வு, சிறப்புச் செய்திகள், முக்கிய செய்திகள் » அபிவிருத்தி மூலம் சமாதானம் ?

அபிவிருத்தி மூலம் சமாதானம் ?

அபிவிருத்தி என்றபதத்திற்கு பல அர்த்தங்கள்  உள்ளன  அதன்  உள்ளாந்தப் பொருள்  அதை செயற்படுத்துபவரின்  உண்மை  நோக்கத்தில்  தான்  தங்கியுள்ளது.  மனித வரலாற்றின் கால ஓட்டத்தில், நாகரீகங்கள்  தோற்றம் பெற்ற அன்றைய காலத்தில்  இருந்து  இன்றைய கன்னி யுகம் வரையிலான வளர்ச்சிக்காலத்தில்

  • காலம்  காலமான போர்களும் அதற்கு பின்னான அபிவிருத்தி,
  • அரசியல் பொருளாதாரக் கொள்கையால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான அபிவிருத்தி

என பல்வேறு  பட்ட செயற்பாடுகளுக்கு  அபிவிருத்தி  என்ற சொல்லாடல் பாவிக்கப்படுகின்றது.

உண்மையான அபிவிருத்தி என்பது அபிவிருத்திக்குரிய சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும். முக்கியமாக தனிமனித அபிவிருத்தி, சமூக அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்திக்குரிய  சூழ்நிலை உருவாக்கல் மிகவும் அவசியம்.

அபிவிருத்தியை முன்னெடுக்கும் நாடுகள் தங்கள் உற்பத்தியின் சந்தை வாய்ப்புக்காக குறுகிய அபிவிருத்தித்திட்டங்களை தேசிய இனத்திற்கு சொந்தமான வளங்களை சுரண்டுவதாகவே இருக்கின்றன.

கல் ஓயா நீர்ப்பாசனத்திட்டம்

இலங்கைத்தீவை எடுத்துப்பார்த்தால் 60 வருடங்களுக்கு மேல் வடக்கு-கிழக்கு அபிவிருத்தி முற்றிலும் தடைப்பட்டிருந்தது, இதேகாலப்பகுதியில் அங்கு வாழ்ந்த பூர்வீக மக்களின் சமூக மையங்களான  வைத்தியசாலைகள்,  கோயில்கள், தேவாலயங்கள்,பாடசாலைகள்  மற்றும் மக்களின் வாழ்வாதாரங்களான  குடியிருப்புக்கள், தொழில் மையங்கள்  என்பன இராணுவத்தின் விமானக்குண்டுவீச்சினாலும், ஆட்லறி  எறிகணை  வீச்சினாலும்  தொடர்ச்சியாக  இடைவிடாது  அழிக்கப்பட்டதுடன்  நின்றுவிடாமல்  மக்களின்  வருமானத்தினை பெருக்கக்கூடைய பெருநிலப்பிரதேசங்கள் பாதுகாப்பு வலயம் என ராணுவத்தால் அபகரிக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி என்ற பெயரில் 1950களில் உலக வங்கியின் உதவியுன் முன்னெடுக்கப்பட்ட கல் ஓயா நீர்ப்பாசனத்திட்டமானது, ஒரு பாரிய அபிவிருத்தித்திட்டமாக காட்டப்பட்டாலும்,  இது இலங்கைத்தீவின் தமிழர் பூர்விகப்பகுதிகளை சூரையாடும் நோக்கம் கொண்டதாகவே இருந்திருக்கிறது.  இப்பகுதியில் இன்று தமிழர்கள் சிறுபான்மை இனமாக்கப்பட்டுள்ளனர்.

மணல்லாறு பிரதேசம்

80 களில் வர்த்தமாணி அறிவித்தலின் மூலம் மணலாறு பிரதேசம் (கென்ட் தோட்டம் (Kent Farm), டொல்லர் தோட்டம் (Dollor Farm) அகிய)  அரசமயப்படுத்தப்பட்டது,  பின்னர் அப்பகுதியில்  சிறைகளில் இருந்த 450 சிங்கள  குற்றவாளிகளை  குடும்பங்களுடன் குடியமர்த்தப்பட்டனர். இதில் கவனிக்க வேண்டிய விடயம் இங்கு வாழ்ந்தவர்கள் 77 இனக்கலவரத்தில் தங்களது சொத்துடைமைகளை இழந்த  மலைகத்தமிழ் அகதிகள் என்பது குறிப்படத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைக்கு பல காரண்ங்கள் கூறப்பட்டாலும், இதன்  அரசியல் காரணம்  இப்பிரதேசம் வடதமிழீழத்தையும் தென் தமிழீழத்தையும் இணைக்கும் பகுதியாக இருந்ததே. அந்நாளின் வவுனியாவின்  இலங்கை காவல்த்துறை சுப்பிரிண்டனாக இருந்த ஹெரத் என்பவர் மணலாறு பிரதேசங்களில் இருந்த மலைகத்தமிழ் அகதிகளையும் அங்கு வசித்த ஈழத்தமிழர்களையும்  தந்திரமாக பிரித்தாண்டார். ஈழத்தமிழர்களின்  வளங்களை மலையகத்தமிழ் அகதிகள்  சுரண்டுவதாகவும். இவர்கள் மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்வதால் ஈழத்தமிழரின் உழைப்பு பாதிக்கப்படுவதாக முதலைக்கண்ணீர் வடித்தார். இதற்க்கு பல யாழ் நகரைச் சேர்ந்த தமிழ் வர்த்தகர் எடுபட்டன்ர் என்பது கசப்பான உண்மையாகும்.

திருகோணமலையைப் பொறுத்தவரையில் பல நகர அபிவிருத்தித்திட்டங்கள்  சிங்கள மக்களின்  சனத்தொகை  அதிகரிப்பை முதன்மைப்படுத்தியது ,  சிங்கள சனத்தொகை மட்டும் உயர வேண்டும் என்பதில் சிங்கள அரச அதிபர்கள்  (Trinco GA) மிக அவதானமாக செயற்பட்டார்கள்.

1981 முதல் 2002 வரையான சனத்தொகைப் பரம்பலை எடுத்து நோக்கினால் இலங்கையின்  மற்றைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது சிங்கள மக்களின் சனத்தொகை  அதீத வளர்ச்சி.  சதாரணமாக ஒரு நாட்டின் சனத்தொகை வளர்ச்சி அந்நாட்டின் தலை நகரை அண்டிய பகுதிடயிலேயே அதிகமாகக் காணப்படும்.ஆனால் சிறிலங்காவில்  மட்டக்களப்பு  அம்பாறை திருகோணமலை (தமிழர்களின் பூர்வீகபிரதேசங்களில்)  மாவட்டங்களிலும் சிங்களமக்களின் சனத்தொகை  அதீத வளர்ச்சியாகவே  காணப்படுகிறது. இதே வேளை அபிவிருத்தி முதலீடுகள் தென்பகுதி மாவட்டங்களிலேயே அதிகமாக பயன் படுத்தப்பட்டுள்ளது.

திருமலை அபிவிரித்தித்திட்ட வரைபு

13ம் திருத்தச்சட்டத்துக்கு பின் உருவாக்கப்பட்ட மாகாணசபை அரசின் திட்டங்களுக்கமைய திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி என்று பாரிய திட்டங்கள் தீட்டப்பட்டது. இதற்கான அபிவிருத்தி நிதியினை பலநாடுகளில் இருந்து பெறப்பட்ட போதும் தொடர்ச்சியாக நடந்த போரினால் இத்திட்டங்களின் நிதியினை அரசு போர்த்தலபாடங்களுக்கும், தென்பகுதி அபிவிருத்திக்கும் பயன்படுத்தியது. இதே போன்று சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சிக்காலத்திலும் விடுதலைப்புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட 3000 கோடி ரூபாய் அபிவிருத்தித்திட்ட ஆய்வுக்கோவையின் உதவியுடன் பெறப்பட்ட அபிவிருத்திக்கான  வெளிநாட்டு நிதி உதவியும் பிறமாகானங்களின் அபிவிருத்திக்கும் அரசின் யுத்தச்செலவுக்கும் பயன்படுத்தப்பட்டது.

ஆனால் இன்று  சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி. வடக்கு-கிழக்கு  பிரதேசத்தில்  நடைபெற்றாலும், தூரநோக்கில் சிந்தித்தால் ஆபிரிக்காவின் நிரந்தரக் குடிமக்களின் பாரிய  பிரதேசங்களை சீன முதலீட்டாளர்களின் ஆதிக்கத்திக்கு உள்ளானது போல் சிறிலங்காவின் வடக்கு-கிழக்கு பிரதேசநிலங்களும்  சீன முதலிட்டாளர்களின்  ஆதிக்கத்திற்கு உள்ளாகும்.  தற்போது  தமிழரின் பல பூர்வீக நிலங்கள் அரசகட்டுப்பாட்டில் இருக்கின்றது.(வன்னி,யாழ்,மட்டு பிரதேசங்களில்  அதிஉயர்  பாதுகாப்பு வலயங்கள்)  இதனால் சனத்தொகை பரம்பல் குறைந்த பிரதேசம்  தமிழர் தாயகப்பகுதியாகும் . அதேநேரம்  சீனாவின் செல்வாக்கிக்கும், சீனக்கடனுதவிக்கும் பதிலாக இலங்கையிடம் சீனா தனக்கான இலாபப்பங்கை கேக்கும் போது தமிழர் தாயகப்பகுதி இதற்கு இரையாகும்.  இவ்விடத்தில் நல்ல உதாரணமாக வெளிநாட்டு முதலீடுகளின் வேலையாட்களாக ஈடுபடுத்துவதற்கு சீனா கைதிகளை பயன்படுத்தப்படுவதான செய்தியை எடுத்துக்கொள்ளலாம். தெற்காசியா பூகோள அரசியலில் சீனா தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கு அபிவிருத்தி என்ற போர்வையில் அதிக சீனர்களை இலங்கையின் வடக்கு-கிழக்கு பகுதியில் நிரந்தரக்குடிகலாக்கும் திட்டம் இருப்பதாக சிலாய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வடமாகாணத்தைச் சிங்கள மாகாணமாக மாற்றி அங்கு இராணுவத்தினர் உட்பட அவர்களது குடும்பங்களுமாக சுமார் நான்கு இலட்சம் பேரை குடியேற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக த.தே.கூ யின் அறிகையை ஒன் று தெரிவிக்கிறது.

குடிசனப்பரம்பல் - தென் தமிழீழம்

மனித வாழ்க்கையில் அரசியல், அபிவிருத்தி, விளையாட்டு என்பவற்றை பிரித்துப் பார்க்கவேண்டும் என்ற கருத்துருவாக்கம் எம் மக்கள் மத்தியில் உள்ளது. இன்றைய சந்தையை மையப்படுத்திய உலகப் பொருளாதாரத்தில் இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது என்பது உண்மையும், யதார்த்தமும் ஆகும்.

எந்த ஒரு நாட்டின் அபிவிருத்திக்கும் அன் நாட்டின் அரசியல் நீரோட்டம் மிகமிக அத்தியாவசியமானது. அபிவிருத்தி ஒருபோதும்  அரசியலுக்கு மாற்றிடாகாது.  இந்தவகையில் ஸ்ரீலங்கா அரசானது வடக்கு-கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தியை அங்கு நிரந்தரமாக வாழுகின்ற தமிழ் மக்களின் 60 அரசியல் போராட்டத்திற்கு தீர்வாக பிரதியீடு செய்ய முயல்கின்றது.

விடுதலைப்புலிகள் ஆயுதப்போரில் தோல்வியடைந்த பின்னர் இனி தமிழர்கள் யாரும் அரசியல் உரிமைகள் பற்றி பேச வாய் திறக்கக்கூடாது, திறக்கவும் முடியாது, என்ற கருத்துருவாக்கத்தினை முயல்கின்றது சிங்களதேசமும், அதனுடன் ஆதரவாக செயற்படும் நாடுகளும். இதன் முக்கிய குறிக்கோள் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிப்பதேயாகும்

அரசியல் தீர்வு காணும்வரை அபிவிருத்தி தேவையில்லை என்று  கூறவரவில்லை. ஆனால் இந்த சமூக பொருளாதார அபிவிருத்தி  தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் இன அடையாளங்களை பாதுகாப்பதற்கும் மிக அவசியமாகும்

அபிவிருத்தியும், அரசியல் தீர்வுக்கான முயற்சிகளும் ஒன்றை ஒன்று பங்களிப்பதாகவும், அதேவேளையில் நிரந்தர தீர்வுக்கான அடித்தளமாகவும் அமைய வேண்டும். இந்த இரண்டிலும் புலம் பேர் அமைப்புக்களே பங்குகொள்ள வேண்டிய   அதேவேளை புலம்பேர் தமிழ் மக்கள் மிகவும் கவனமாக செயற்படுவது அவசியம்.

அபிவிருத்தி மனிதநேயப்பணிகளில் ஈடுபடுபவர்களும் அரசியல் முன்னெடுப்புக்களை செய்பவர்களும் வெளிப்படையாக தனித்துவத்தை பேணவேண்டும். அதேவேளை உட்புறமாக நல்ல செயற்பாட்டு உறவையும் பேணவேண்டும்.

அண்மைக்காலத்தில் சிலரது செயற்பாடுகள் வருத்தத்தை தருகின்றது.அபிவிருத்தி மனிதநேயம் என்ற ஸ்ரீலங்கா அரசின் சதிவலையில் விழுந்தது மட்டுமல்லாமல் புலம்பெயர் மக்களிடையே தேவையற்ற விரிசல்களை உருவாக்கியுள்ளது.

அனைத்து தமிழ்  அமைப்புக்களும் ஒரு தளத்தில் இணைந்து  அடுத்த இருபது வருடத்துக்குரிய சரியான திட்டத்தை வகுத்து அதற்கேற்ப செயற்படவேண்டும்.

ஊடகம் இணையத்ற்காக பரிதி.

1 Response to " அபிவிருத்தி மூலம் சமாதானம் ? "

  1. Kannan says:

    மிகவும் முக்கியமான விடையங்களை தொகுத்துள்ளீர்கள், தொடர்ந்து எழுதுங்கள்.

Leave a comment